கீழடி 6-ம் கட்ட அகழாய்வில் 6 அடுக்கு உறை கிணறு கண்டுபிடிப்பு

6 அடுக்கு உறை கிணறு

  • Share this:
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் யூனியன்  கீழடியில் நடைபெற்ற வரும் 6ம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. அதில் கீழடி,கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றது, இதில் கீழடியில்  நடைபெற்ற பணியின் போது 6அடுக்கு உறை கிணறு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.

இதன் ஒரு உறை முக்கால் அடி உயரமும் இரண்டு அறை  அடி அகலமும் கொண்டு உள்ளது மொத்தம் 6 உறைகள் கொண்ட அடுக்கு கிணறு கண்டு பிடிக்கபட்டு உள்ளது. கீழடியை பொறுத்த வரை முதன் முறையாக உறை கிணறு கண்டுபிடித்து இருப்பது முதல் முறை.

ஏற்கனவே கீழடி பகுதியில் விலங்கின் எழும்பு கூடுகள்,கட்டிட சுவர்கள் ,சிறிய பெரிய பனைகள், கழிவு நீர் வாய்கால்கள், இரும்பு உலைகள் ஆகியவை கண்டுப்பிடிக்கபட்டு உள்ளன. தண்ணீரை எவ்வாறு சேமித்து வைக்க வேண்டும், தண்ணீரை பயன்பாடுகளை பண்டைய தமிழர்கள் முக்கியத்துவம் கொடுத்து இருப்பது ஆய்வில்.தெரிய வருகின்றது. இதேப்போல் கொந்தகை அகழாய்வில் மனித எலும்பு கூடுகள், முதுமக்கள் தாழிக்கள், குழந்தையின் முழு  எலும்புகள் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.இதே மணலூரில் சுடுமண் உலை ,சிறிய ,பெரிய எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. நான்கு இடங்களிலும் தொடர்ந்து அகழாய்வில் வியக்கத்தக்க பொருட்கள் ,பழங்கால மக்கள் வாழந்த நகர, நாகரிகம்,  பயன்படுத்தி பொருட்கள் ,விவசாயத்தில் அப்போதே சிறந்த  விளங்கிய ஆதாரங்கள கிடைத்து வருவதால் கீழடி அகழாய்வு பழங்கால தமிழரின்  உலகத்திற்கே எடுத்து காட்டாக விளஙகி வருகின்றது.
Published by:Vijay R
First published: