தமிழகத்தில் பரவலான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

சேலம், வேலூர் உட்பட தமிழகத்தின் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பரவலான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை வானிலை ஆய்வு மையம்
  • Share this:
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், ஈரோடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 48 மணி நேரத்தில் வட கடலோர மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், வேலூர், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


Also see:

கடந்த 24 மணி நேரத்தில் பெரம்பலூர் மாவட்டம் அகரம் சீகூர், விழுப்புரம் மாவட்டம் வல்லம் பகுதியில் 12 செ.மீ மழையும், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, சேலம் மாவட்டம் வீரகனூர், வேலூர் மாவட்டம் பொன்னை அணை, திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் கடலூர் மாவட்டம் கீழச்சேர்வை பகுதிகளில் 7 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியசும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியசும் பதிவாகும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 - 50 கி.மீ வேகத்திலும்,

தென் கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல், கேரளா, கர்நாடகா மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 - 50 கி.மீ வேகத்திலும், தென்மேற்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50 - 60 கி.மீ வேகத்திலும் வீசும் என்பதால் இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் இன்று மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
First published: June 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading