முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி பெயரில் 6 கோடி மோசடி முயற்சி

மோசடியில் ஈடுபட்ட நபர்

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட முருகானந்தம் என்பவரை போலீஸார் கைது செய்தனர். தலைமறைவான நபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

  • Share this:
கோவையில் மத்திய அரசின் முன்னாள் முன்னாள் அட்டார்னி ஜெனரலும்  உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞருமான முகுல் ரோத்தகியின் பெயரில் 6 கோடி ரூபாய் காசோலை கொடுத்து மோசடி செய்ய முயன்ற நபரை குற்றபிரிவு காவல் துறையினர் கைது செய்தனர்

கோவை புதூர் மீனாட்சி நகர் பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம். இவர் அதே பகுதியில் உள்ள எச்.டி.எப்.சி வங்கியில் கடந்த மே 26 ம் தேதி 6 கோடி ரூபாய்க்கான காசோலையை , திருமங்கை சேரிட்டபிள் டிரஸ்ட் என்ற கணக்கில் செலுத்தியுள்ளார். விரைவாக காசோலையை பரீசிலித்து திருமங்கை அறக்கட்டளை கணக்கில் பணத்தை வரவு வைக்கும்படி கேட்டுள்ளார். வங்கி அதிகாரி சூரஜ் இந்த காசோலையை ஆய்வு செய்து பார்த்த போது அது போலியானது என்பதும், காசோலையின் உரிமையாளர் முகுல் ரோத்தகி என்பவருடையது என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து இது தொடர்பாக வங்கி மேலாளர் சூரஜ் கோவை குற்றபிரிவு காவல் துறையில் புகார் அளித்தார்.

Also Read:விமானம் மூலம் சென்னைக்கு அழைத்துவரப்பட்ட சிவசங்கர் பாபா - சிபிசிஐடி அலுவலத்தில் தொடரும் விசாரணை

இதனையடுத்து காவல் துறையினர் வங்கி ஊழியர்கள் உதவியுடன் டெல்லியில் சுந்தர் நகர் கிளையைத் தொடர்பு கொண்டு விசாரித்த போது, அந்த  காசோலை மத்திய அரசின் முன்னாள் அட்டர்னி ஜெனரலும், மூத்த வழக்கறிஞருமான முகுல் ரோத்தகி என்பது தெரியவந்தது.டெல்லி வங்கி கிளை அதிகாரிகள் முகுல் ரோஹத்கியிடம் விசாரித்த போது, அவர் திருமங்கை அறக்கட்டளைக்கு எந்த காசோலையும் வழங்கவில்லை என்பதும்  தெரியவந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதனையடுத்து வங்கி அதிகாரி சூரஜ், காசோலை டெபாசிட் செய்த முருகானந்தத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு , காசோலை தொடர்பாக சில சந்தேகங்கள் இருப்பதாகவும், அதை சரி செய்து விட்டு  பணத்தை வாங்கி செல்லும் படி தெரிவித்துள்ளார்.இதனையடுத்து  முருகானந்தம் கோவைபுதூர்  வங்கி  கிளைக்கு வந்த போது அங்கிருந்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.அவரிடம் மேற்கொண்ட விசரணையில் சாதிக் , வடிவேலு ஆகியோர் இந்த  காசோலையை தயார் செய்து, முன்னாள் அட்டர்னி ஜெனரலின் போலி கையொப்பத்தை போட்டு,  முருகானந்தம் மூலம் வங்கியில் செலுத்தி, சென்னையைச் சேர்ந்த திருமங்கை அறக்கட்டளைக்கு பணத்தை பெற முயற்சித்து இருப்பது தெரியவந்தது.

Also Read: Covid -19 : ஆம்புலன்ஸ் ஓட்டுவது பதற்றமாகத்தான் இருந்தது - கொரோனா தொற்றால்உயிரிழந்தவர்களின் உடல்களை கொண்டு செல்லும் கல்லூரி மாணவி

இதனையடுத்து முருகானந்தத்தை கைது செய்த குற்றபிரிவு போலீசார் அவர் மீது கூட்டுசதி, மோசடி, ஏமாற்றுதல், போலி ஆவணம் தயாரித்தல் உட்பட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இதில் தலைமறைவாகியுள்ள வடிவேல், சாதிக் உள்ளிட்ட சிலரை கைது செய்ய இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. மத்திய அரசின் முன்னாள் அட்டர்னி ஜெனரலாக இருந்த பிரபல வழகறிஞர் பெயரில் 6 கோடி ரூபாய் மோசடி நடக்க இருந்த நிலையில் வங்கி அதிகாரிகளும், காவல் துறையினரும் இணைந்து செயல்பட்டு மோசடியை தடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Ramprasath H
First published: