இந்து முன்னணியினரை 3 பேரை அரிவாளால் வெட்டிய வழக்கில் பாஜகவினர் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை கவுண்டம்பாளையத்தில் இந்து முன்னணி மற்றும் பா.ஜ.கவினரிடையே ஏற்பட்ட மோதலில் 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. கவுண்டம்பாளையம் அருகே இருசக்கர வாகனமும், கார் ஒன்றும் நேற்று மாலை மோதிக்கொண்டது. இதற்கு பஞ்சாயத்து செய்ய இந்து முன்னணியினரும், பா.ஜ.க-வினரும் சென்றிருக்கின்றனர். இந்து முன்னணியினர் கார் ஓட்டுநருக்கும், பா.ஜ.கவினர் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணுக்கும் ஆதரவாக வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.
விபத்துக்குள்ளானவர்கள் அங்கிருந்து சென்ற நிலையில் பா.ஜ.கவைச் சேர்ந்த அசோக் என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து இந்து முன்னணியை சேர்ந்த கார்த்திக், ஜெரால்ட் , ஹரீஷ் ஆகிய 3 பேரையும் அரிவாளால் வெட்டியுள்ளனர். படுகாயமடைந்த மூவரையும் மருத்துவமனையில் சேர்த்த போலீசார், அசோக் மற்றும் அவரது நண்பர்கள் 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இவர்களுக்குள் முன் விரோதம் இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
Also See...
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: BJP, Coimbatore, Hindu Munnani