ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

இறந்து கிடந்த யானையின் தந்தங்களை வெட்டி கடத்த முயற்சி - ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின் 6 பேர் கைது

இறந்து கிடந்த யானையின் தந்தங்களை வெட்டி கடத்த முயற்சி - ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின் 6 பேர் கைது

யானையின் தந்தங்கள் - கோப்புப் படம்

யானையின் தந்தங்கள் - கோப்புப் படம்

கேரளா மற்றும் தமிழக வனப் பகுதிகளில் 2011ம் ஆண்டு 9 யானைகளை வேட்டையாடிக் கொன்று அவற்றின் தந்தங்களை வெட்டி எடுத்து கடத்திய வழக்கில் பல ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த பாபு ஜோன்ஸ் என்பவர் கடந்த செப்டம்பர் மாதம் கைது செய்யப்ப்டடார். இந்த நிலையில், இறந்து கிடந்த யானையின் தந்தங்களை வெட்டி எடுத்து கடத்தி விற்க முயன்ற வழக்கில் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு 6 பேர் கைதாகியுள்ளனர்.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  கோயம்புத்தூர் வனக்கோட்டம், பெரியநாயக்கன் பாளையம் வனச்சரகம், தோலம்பாளையம் வனப்பகுதியில் கடந்த 2017 ஆம் வருடம் குஞ்சூர்பதி ஊரைச் சேர்ந்த 33 வயதான கார்த்திக் குமார் என்பவர், காட்டில் இறந்து கிடந்த ஒரு ஆண் யானையின் சடலத்தைப் பார்த்துள்ளார்.

  இந்த தகவலை கார்த்திக் குமார் தனது நண்பரான ஈஸ்வரன் என்பவரிடம் தெரிவித்துள்ளார். ஈஸ்வரனுடன் யானை இறந்த இடத்திற்க்கு சென்று அதன் இரு தந்தங்களையும் அறுத்து எடுத்து காட்டிற்குள் கார்த்திக் குமார் மறைத்து வைத்துள்ளார்.

  பின்னர் வீரபத்திரன் என்பவர் மூலம் மறைத்து வைத்துள்ள தந்தங்களை விற்க கோவனூரைச் சேர்ந்த மான் என்றழைக்கப்படும் தாமோதரனை ஏற்பாடு செய்துள்ளனர்.

  அதே நேரத்தில் ஈஸ்வரன் தனித்திட்டம் தீட்டினார். தந்தங்களை விற்பதற்காக கேரளாவில் வேலை செய்து வந்த தங்கராஜ் மற்றும் அண்ணாச்சி என்ற மோகன் ராஜ் ஆகியோரை அழைத்து வந்தார்.

  காட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தந்தங்களை எடுத்த ஈஸ்வரன், வீரபத்திரன் இருவரும், சீலியூர் கிராம வன எல்லைக்கு அருகில் சென்று தங்கராஜ் மற்றும் மோகன்ராஜ் ஆகியோரிடம் காண்பித்து உள்ளனர்.

  பின்பு அந்த தந்தங்களை அதே இடத்தில் மறைத்து வைத்துவிட்டு கணுவாய்பாளையத்தில் இருக்கும் டாஸ்மாக் சென்று மது அருந்தி உள்ளனர்.

  மது அருந்தி கொண்டு இருந்த போது தங்கராஜ் மட்டும் வெளியே சென்று வருகிறேன் என்று சொல்லிவிட்டு சென்று அந்த தந்தங்களை திருடி அதை விற்பதற்காக கேரளா எடுத்து சென்றுவிட்டார்.

  இவர்கள் மூன்று பேரும் அங்கு சென்று பார்த்த போது தந்தங்கள் இல்லை. இதற்கிடையே, மான் என்ற தாமோதரன் தந்தங்களை பற்றி ஈஸ்வரன் மற்றும் வீரபத்திரனிடம் கேட்டபோது அது தொலைந்து விட்டதாக சொல்லியுள்ளனர். ஆனால் அதை நம்பாத மான் தாமோதரன், அவர்கள் இருவரும் தந்தங்களை விற்று விட்டதாக குற்றம்சாட்டி தன் பங்கு பணத்தினை கேட்டு அடியாட்களை வைத்து தாக்கியுள்ளார். இந்த சம்பவம் நடந்து ஒன்றரை ஆண்டுகள் கழிந்த நிலையில், கடந்த 15 நாட்களுக்கு முன்பாக, கள்ளச்சாராயம் விற்ற வழக்கில் மான் தாமோதரன் கைதானார்.

  போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், யானை தந்தங்கள் பற்றிய தகவல்களையும் அவர் கூறியுள்ளார். அவர் அளித்த தகவலின் பேரில், கார்த்திக்குமார், வீரபத்திரன், மோகன்குமார் ஆகிய மூவரையும் போலீசார் கைதுசெய்து விசாரணை நடத்தினர்.

  இவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில், கொச்சிக்கு சென்ற வனத்துறையினர் அங்கு பதுங்கியிருந்த தங்கராஜைக் கைது செய்தனர். தங்கராஜ், தான் பதுங்கியிருந்த இடத்தினருகே கிணற்றில் பதுக்கி வைத்திருந்த 2 தந்தங்களையும் வனத்துறையினர் மீட்டனர். இதற்கிடையே இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த மற்றொரு நபரான ஈஸ்வரன் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

  மேலும் படிக்க...

  அடுத்த 48 மணி நேரத்தில் இந்த பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

  இந்த வழக்கில், கார்த்திக்குமார், மான் தாமோதரன் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2 தந்தங்களும் தலா 2 அடி நீளம் கொண்டவை. அவற்றின் மொத்த எடை 5 கிலோ. இவற்றின் மதிப்பு 2 லட்சம் ரூபாய் இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Coimbatore, Elephant, Kerala