• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • அமைச்சர் வீட்டை முற்றுகையிட வந்த 6 பேர்... கைது செய்ய 500 போலீசார்...!

அமைச்சர் வீட்டை முற்றுகையிட வந்த 6 பேர்... கைது செய்ய 500 போலீசார்...!

  • News18
  • Last Updated :
  • Share this:
மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜுவின் வீட்டை முற்றுகையிட வந்த 6 பேரை கைது செய்ய காலை முதலே 500 போலீசார் காத்திருந்த நிகழ்வு நடந்துள்ளது.

குடியுரிமை சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்ற வலியுறுத்தி பழனிபாபா மாணவர் கூட்டமைப்பு சார்பில் மதுரை செல்லூரில் உள்ள அமைச்சர் செல்லூர் ராஜுவின் வீடு முற்றுகை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து இன்று காலை 8 மணிக்கெல்லாம் அமைச்சர் வீடு இருக்கும் பகுதியில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டிருந்தனர். நேரம் செல்லச்செல்ல அவ்வழியாக வரக்கூடிய அனைத்து வாகனங்களும் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

முற்றுகைக்கு வருவோரை தடுத்து நிறுத்தி கைது செய்வதற்காக ஏராளமான வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. பெரிய அளவிலான கூட்டம் வரும் என போலீசார் எதிர்பார்த்திருந்த நிலையில் கருப்பு சட்டை அணிந்து வந்த 6 பேர் மட்டும் பதாகை உடன் வந்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்து கைதாகினர்.

6 பேரை கைது செய்வதற்கு காலையிலிருந்து 500க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankar
First published: