சென்னையில் அப்பாவுக்கு உதவியாக பழ வியாபாரம் செய்யும் 5-ம் வகுப்பு படிக்கும் சிறுவன்

பழ வியாபாரம்

சென்னை கே.கே.நகர் பகுதியில் வருண் என்ற 5-ம் வகுப்பு படிக்கும் மாணவர் அப்பாவுக்கு உதவியாக பழம் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

  • Share this:
கொரோனா பெரும்தொற்று கடுமையாக பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் தேவையில்லாமல் குழந்தைகள் கர்ப்பிணிகள் கட்டாயம் வெளியே வர வேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்தி வருகிறது.

தமிழகத்தில் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு மூலம் கொரோனோ பரவல் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பழங்கள், காய்கறிகள் மக்களுக்கு கிடைக்க நடமாடும் கடைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  அவ்வாறு அனுமதி பெற்று பழங்களை வாகனம் மூலம் விற்பனை செய்யும் கோவிந்தராஜ், உதவிக்கு தனது மகனை உடன் அழைத்து செல்கிறார். அதற்கு காரணம் தனது மகன் தான் என்கிறார் அவர்.

வேலைக்கு வருவது குறித்து பேசிய அந்தச் சிறுவன், ‘கொரோனோ காலத்தில் உதவிக்கு வேலைக்கு ஆட்கள் வைத்தால் வேலைக்கு வரும் ஆட்கள் கொரோனோ விதிகளை கடைப்பிடிப்பதில்லை. இதனால் தனது அப்பாவுக்கு கொரோனோ வர வாய்ப்பு உள்ளது. எனவே நான் பாதுகாப்பாக வாகனத்தில் அமர்ந்தபடி அவருக்கு உதவி செய்வேன். என் அப்பா முக கவசம் அணியவில்லை என்றால் அவருக்கு எடுத்து சொல்வேன் என கூறினார்.

இருந்தாலும் இந்த கொரோனா காலத்தில் மாணவர்கள் பாதிக்க கூடாது என்பதற்காக தான் பள்ளிகளை தமிழக அரசு மூடியுள்ளனர்.
எனவே என்ன காரணமாக இருந்தாலும் இதுபோன்ற காலத்தில் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்பதே மருத்துவர்களின் கருத்தாக உள்ளது.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published: