ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மழை வெள்ள நிவாரண நிதியாக தனது உண்டியல் பணத்தை முதல்வரிடம் வழங்கிய 5-ம் வகுப்பு மாணவி

மழை வெள்ள நிவாரண நிதியாக தனது உண்டியல் பணத்தை முதல்வரிடம் வழங்கிய 5-ம் வகுப்பு மாணவி

உண்டியல் பணத்தை முதல்வரிடம் வழங்கிய 5-ம் வகுப்பு மாணவி

உண்டியல் பணத்தை முதல்வரிடம் வழங்கிய 5-ம் வகுப்பு மாணவி

தாம்பரத்தில் வெள்ளத்தடுப்பு பணிகளை முதல்வர் மு்.க.ஸ்டாலின் ஆய்வு செய்த போது மழைவெள்ள நிவாரண நிதியாக தனது உண்டியல் பணத்தை அவரிடம் 5 வயது சிறுமி வங்கினார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையின் காரணமாக தாம்பரத்தை அடுத்த வரதராஜபுரம், முடிச்சூர் பகுதிகளில் அதிக வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. தாம்பரம் பகுதிகளில் என்னென்ன வெள்ளத்தடுப்பு பணிகள் நடைபெற்றுள்ளன என்பதை கண்டறிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

  முதலில் இரும்புலியூர் டி.டி.கே. நகர், வன்னியன்குளம் பகுதிக்கு சென்று அங்கு நடைபெற்றுவரும் வெள்ளத்தடுப்பு பணிகளை பார்வையிட்டார். அதன் பிறகு முடிச்சூர் ஊராட்சியில் அமுதம் நகர் பகுதியில் நடைபெற்ற வெள்ளத்தடுப்பு பணிகளை பார்வையிட்டார்.

  இதனிடையே சென்னை பழைய பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்த பிரபு, சுதா இந்த தம்பதியின் 10-வயது மகள் இலக்கியா. இவர் ஐந்தாம் வகுப்பு படித்து வருகின்றார். இவர் கடந்த 2 ஆண்டுகளாக உண்டியலில் பணம் சேர்த்து வருகிறார். உண்டியல் பணத்தை கொரோனவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுப்பதற்காக சேர்த்து வைத்திருந்தார். அப்போது சிறிய தொகை மட்டுமே இருந்ததால் தொடர்ந்து பணம் சேர்த்து வைத்து வந்துள்ளார்.

  Also Read : ரஜினிகாந்த்துடன் சசிகலா திடீர் சந்திப்பு

  தற்போது மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுக்க வேண்டும் என நினைத்து தமிழக முதல்வர் இன்று தாம்பரம் அடுத்த அமுதம் நகர் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்துவந்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவரிடம் 10-வயது சிறுமி இலக்கியா சிறுக சிறுக சேர்த்து வைத்த உண்டியல் பணத்தை கொடுத்தார். அந்த பணத்தை பெற்றுகொண்ட முதல்வர் முக.ஸ்டாலின், இலக்கியாவிற்கு சாக்லேட் கொடுத்து வாழ்த்துகளை தெரிவித்தார்.

  Published by:Vijay R
  First published:

  Tags: Chennai, MK Stalin