கோடம்பாக்கத்தில் 58 பேருக்கு கொரோனா உறுதி: எம்.ஜி.ஆர், கே.கே சாலையில் கடைகள் மூடல்

கோடம்பாக்கம் மண்டலத்துக்கு உட்பட்ட 138-வது வார்டில் 58 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், அப்பகுதியில் உள்ள கடைகள் முழுவதுமாக அடைக்கப்பட்டு பொதுமக்கள் நடமாட்டத்திற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

கோடம்பாக்கத்தில் 58 பேருக்கு கொரோனா உறுதி: எம்.ஜி.ஆர், கே.கே சாலையில் கடைகள் மூடல்
(கோப்புப் படம்)
  • Share this:
சென்னை மாநகராட்சி, கோடம்பாக்கம் மண்டலத்துக்கு உட்பட்ட, 138 வார்டில் மொத்தம் 23 தெருக்கள் உள்ளன. இப்பகுதியில் 1,257 வீடுகளில் 10,975 பேர் வசிக்கின்றனர். கோடம்பாக்கம் மண்டலத்தில் அதிக தொற்று பாதிப்பு இருப்பினும், பல்வேறு தடுப்பு நடவடிக்கையின் மூலம் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், 138 வார்டில் எம்.ஜி.ஆர்.நகர், கே.கே.சாலை மற்றும் அதை சுற்றியுள்ள 23 தெருக்களில், 58 நபர்களுக்கு கடந்த சில நாட்களில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்த வார்ட்டில் தொடர்ந்து கொரோனா தொற்று பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தொற்று தடுப்பு நடவடிக்கையாக அப்பகுதியில் உள்ள கே.கே சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் கட்டுப்பாட்டு பகுதியாக இன்று மாற்றப்பட்டுள்ளது.


சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் அப்பகுதில் உள்ள அனைத்து கடைகளையும் மூடினர். மேலும், அப்பகுதியில் பொதுமக்கள் நடமாட்டத்திற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடு 14 நாட்களுக்கு தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Also see:
First published: June 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading