Home /News /tamil-nadu /

கோவையில் விற்பனைக்கு வந்த 57 கிலோ எடை கொண்ட 'டைகர் ஃபிஷ்'!

கோவையில் விற்பனைக்கு வந்த 57 கிலோ எடை கொண்ட 'டைகர் ஃபிஷ்'!

டைகர் ஃபிஷ்.

டைகர் ஃபிஷ்.

"இந்த மீன் கிலோ 1000 ரூபாய்க்கு ஏற்றுமதி செய்யப்படும் நிலையில், இங்கு கிலோ வெறும் 350 ரூபாய்க்கு விற்பனை  செய்யப்படுகிறது"

கோவையில் உள்ள மீன் கடையில் 57 கிலோ எடை கொண்ட டைகர் ஃபிஷ் விற்பனைக்கு வந்துள்ளது. அதிக எடை கொண்ட இந்த மீனை கடைக்கு வரும்  வாடிக்கையாளர்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.

கோவையில் ஊரடங்கு தளர்வு நடைமுறைபடுத்தப்பட்ட நிலையில் கடைகளில் வியாபாரம் விறு விறுப்படைந்து வருகின்றது. குறிப்பாக மீன்கடைகளில் வெளிமாவட்டங்களில் இருந்து மீன்கள் வரத்து அதிகரித்துள்ளது. ஏற்றுமதிக்கு இன்னும் அனுமதி அளிக்கப்படாத நிலையில் அந்த வகை  மீன்களும் கோவைக்கு விற்பனைக்கு வருகின்றது.

இந்நிலையில் இன்று கோவையில் உள்ள மீன் கடை ஒன்றுக்கு ’டைகர் ஃபிஷ்’ எனப்படும் வகையைச் சேர்ந்த ஏற்றுமதி அதிகம்  செய்யப்படும் மீன் விற்பனைக்கு வந்தது. 57 கிலோ எடை கொண்ட பிரமாண்டமான தோற்றம் கொண்ட இந்த மீனை பொது மக்கள் ஆர்வத்துடன் பார்த்துச் சென்றனர்.

வழக்கமாக வஞ்சிரம், வாவால் போன்ற மீன் வகைகள் விற்பனைக்கு வரும் எனவும் தற்போது ஏற்றுமதி இல்லாததால் இந்த மீன் இங்கு விற்பனைக்கு வந்திருப்பதாக கடை உரிமையாளர் கபீர் தெரிவித்தார்.





சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




Also see:
Published by:Rizwan
First published:

Tags: Coimbatore, Fish

அடுத்த செய்தி