சென்னை : பணிக்கு சென்ற 55 வயதான பெண் ரயில்வே ஊழியர் உயிரிழப்பு
கொரோனோ தொற்றால் தெற்கு ரயில்வேயில் பணியாற்றிய 55 வயதான பெண் ஊழியர் கொரோனோ தொற்றால் உயிரியிழந்துள்ளார்.
கொரோனோ தொற்றால் தெற்கு ரயில்வேயில் பணியாற்றிய 55 வயதான பெண் ஊழியர் கொரோனோ தொற்றால் உயிரியிழந்துள்ளார்.
- News18 Tamil
- Last Updated: May 26, 2020, 10:48 PM IST
தெற்கு ரயில்வே போலீசாரில் 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது தெற்கு ரயில்வே அலுவலகத்தில் பணியாற்றிய கமர்சியல் ஊழியர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து சென்னை சென்ட்ரலில் இருக்கும் தெற்கு ரயில்வே அலுவலகத்தில் 2 மற்றும் 5 ஆகிய மாடிகள் முழுமையாக அடைக்கப்பட்டது
இந்நிலையில் அயனாவரம் தெற்கு ரயில்வேயில் பணியாற்றிய 55 வயது ரயில்வே பெண் அதிகாரி கொரோனோ தொற்றால் உயிரிழந்து உள்ளார். ஆனால் ஏற்கனவே 33 சதவீத ஊழியர்கள் மட்டும் பணிக்கு வரலாம் என்று ரயில்வே உத்தரவிட்டு இருந்தது. அதிலும் 50 வயதுக்கு மேற்பட்டோர் பணிக்கு வருவதில் தவிர்த்தல் செய்யவேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.
ஆனால் அதனை அதிகாரிகள் முறையாக பின்பற்றவில்லை. தற்போது காலதாமதமாக 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் பணிக்கு வர வேண்டாம் என தெற்கு ரயில்வே ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அயனாவரம் தெற்கு ரயில்வேயில் பணியாற்றிய 55 வயது ரயில்வே பெண் அதிகாரி கொரோனோ தொற்றால் உயிரிழந்து உள்ளார். ஆனால் ஏற்கனவே 33 சதவீத ஊழியர்கள் மட்டும் பணிக்கு வரலாம் என்று ரயில்வே உத்தரவிட்டு இருந்தது. அதிலும் 50 வயதுக்கு மேற்பட்டோர் பணிக்கு வருவதில் தவிர்த்தல் செய்யவேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.
ஆனால் அதனை அதிகாரிகள் முறையாக பின்பற்றவில்லை.