தமிழகத்தில் இன்று 301 ஆண்கள், 251 பெண்கள் உட்பட மொத்தம் 15,233 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 552 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக
சென்னையில் 253 பேரும், செங்கல்பட்டில் 129 பேரும்,
கோவையில் 32 பேரும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் தற்போது கொரோனாவால் சிகிச்சை எடுத்து வருபவர்களின.் எண்ணிக்கை 2313 ஆக உள்ளது. மேலும் 177 பேர் இன்று கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரேனாவால் இன்று எந்த உயிரிழப்பும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,58,997 ஆக உள்ளது. கொரோனாவிலிருந்து 34,18,658 குணமடைந்துள்ள நிலையில் 38,026 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.