என் பொண்ணுக்கும் ஆபரேஷன் தான்.. நைசாக பேசி நகையை சுருட்டிய பெண்

நூதன மோசடி

பல மருத்துவமனைகளில் பெண்களிடம் நைசாக பேசி நூதன முறையில் பெண்களை ஏமாற்றி வந்தது போலீசார்  விசாரணையில் தெரியவந்துள்ளது.

 • Share this:
  மருத்துவமனை ரத்த வங்கிக்கு நகைகளோடு செல்லக்கூடாது என ஏமாற்றி திருடிய வயதான பெண் கைது

  சென்னை திருவெற்றியூர் கிருபை நகரை சேர்ந்த சாந்தி  (43).இவரது மகள் ஷீலா பிரசவத்திற்காக கடந்த வாரம் சென்னை ராயபுரம் அரசு ஆர்எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஷீலாவிற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என டாக்டர்கள் கூறியதால் ஷீலா தனது தாலி செயின் காதில்  அணிந்திருந்த கம்மல்  ரொக்கப்பணம் ரூபாய் 2000த்தை தனது தாயிடம் கொடுத்துள்ளார்.

  Also Read: உல்லாசத்துக்கு அழைத்த இளம்பெண்.. உற்சாகத்துடன் சென்ற பேப்பர் ஏஜெண்ட்- கதவை திறந்ததும் காத்திருந்த அதிர்ச்சி

  தாய் சாந்தி மருத்துவமனை வார்டில் உட்கார்ந்திருந்த போது 53 வயது மதிக்கத்தக்க பெண் அறிமுகமாகியுள்ளார்.  தனது மகளும் அறுவை சிகிச்சைக்காக உள்ளே சென்றுள்ளார். இரண்டு பேருக்கும் ரத்தம் தேவைப்படுகிறது என டாக்டர்கள் கூறியுள்ளனர். நாமிருவரும் ரத்தத்திற்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு சென்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்னோடு வாருங்கள் என கூறியுள்ளார்.

  Also Read:  EXCLUSIVE | தமிழகத்தில் ஆயிரக்கணக்கில் போலி ஓட்டுனர் உரிமம் வழங்கப்பட்டது அம்பலம்

  அதை உண்மை என நம்பிய சாந்தியும் அந்தப்பெண்ணுடன் ஆட்டோவில் ஸ்டான்லி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது ஸ்டான்லி மருத்துவமனை வாசலில் நாம் அதிகமாக நகைகளோடும் பணத்தோடும்  ரத்த வங்கிக்கு செல்லக்கூடாது உங்களிடம் ஏதும் இருந்தால் என்னிடம் கொடுத்து விட்டு செல்லுங்கள் நான் போகும் போது உங்களிடம் தந்து விட்டு செல்கிறேன் என கூறியுள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அவரது பேச்சை உண்மை என நம்பிய சாந்தி  நகை இருந்த கைப்பையை கொடுத்துவிட்டு உள்ளே சென்றுள்ளார. அவர் திரும்பிவந்து பார்த்தபோது அந்தப்பெண் தலைமறைவாகிவிட்டார். இதுகுறித்து சாந்தி சென்னை  ராயபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து ராயபுரம்  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்த நிலையில் சேத்துப்பட்டு சேர்ந்த சாந்தி வயது 53 என்ற பெண்மணி கைது செய்யப்பட்டார். இவர் பல மருத்துவமனைகளில் பெண்களிடம் நைசாக பேசி நூதன முறையில் பெண்களை ஏமாற்றி வந்தது போலீசார்  விசாரணையில் தெரியவந்துள்ளது.

  செய்தியாளர்: அசோக்குமார்  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

   
  Published by:Ramprasath H
  First published: