பழைய இரும்பு கடையில் 5000 பாடப்புத்தகங்கள் பறிமுதல்.. அரசு புத்தக கிடங்கின் உதவியாளர் மேகநாதன் கைது..

Youtube Video

மயிலாடுதுறையில் பழைய இரும்பு கடை ஒன்றில் இருந்து பண்டல் பண்டலாக பள்ளி பாடப்புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 • Share this:
  மயிலாடுதுறை முத்துவக்கீல் சாலையில் பெருமாள்சாமி என்பவர் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் இருந்து 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்கள் கட்டு கட்டாக அடுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வருவாய்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் மகாராணி தலைமையில் அதிகாரிகள் இரும்பு கடையில் சோதனை நடத்தினர். அப்போது, 2019 - 2020- ஆம் கல்வி ஆண்டுக்கான சுமார் 5 ஆயிரம் புத்தகங்களை பறிமுதல் செய்தனர்.

  மேலும், மாவட்ட கல்வி அலுவலர் அளித்த புகாரின் பேரில் மயிலாடுதுறை கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப்பள்ளி புத்தக கிடங்கின் இளநிலை உதவியாளர் மேகநாதன் மற்றும் கடை உரிமையாளர் பெருமாள்சாமி ஆகியோரை கைது செய்த போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  மேலும் படிக்க... புதிய வகை கொரோனா உறுதியானவருக்கு தனி அறையில் வைத்து சிகிச்சை..


  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: