மதுரையில் 500 சவரன் தங்க நகைகள், ரூ.8 லட்சம் ரொக்கப் பணம் கொள்ளை

500 சவரன் நகைகளின் விவரம் மற்றும் 8 லட்சம் ரூபாய்க்கான ஆவணங்களை கேட்டுள்ள போலீசார், கொள்ளையா அல்லது நாடகமா என விசாரித்து வருகின்றனர்.

Web Desk | news18
Updated: January 13, 2019, 11:53 AM IST
மதுரையில் 500 சவரன் தங்க நகைகள், ரூ.8 லட்சம் ரொக்கப் பணம் கொள்ளை
மதுரை கீரைத்துறை காவல் நிலையம்
Web Desk | news18
Updated: January 13, 2019, 11:53 AM IST
மதுரை காமராஜர்புரத்தில் விறகு மண்டி உரிமையாளர் வீட்டில் 500 சவரன் தங்க நகைகள் மற்றும் 8 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

மதுரை கீரைத்துறை பகுதியில் உள்ள காமராஜர்புரத்தில் தங்கவேலு என்பவர் வசித்து வருகிறார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் எம்ஜிஆர் மன்ற மாவட்ட அவைத் தலைவராக உள்ள இவர், மாட்டுத்தாவணியில் விறகு மண்டி நடத்தி வருகிறார். 2 நாட்களுக்கு முன்பு தனது குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்த இவர், இன்று அதிகாலை வீடு திரும்பியுள்ளார்.

பின்னர், தங்கவேலு அலுவலகத்திற்கு சென்ற நிலையில், அவரின் மனைவி நடைபயிற்சிக்காக வெளியில் சென்றுள்ளார். அந்த நேரத்தில் வீட்டின் பின்புறக் கதவை உடைத்து பீரோவில் இருந்த 500 சவரன் தங்க நகைகள் மற்றும் 8 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக கீரைத்துறை காவல் நிலையத்தில் தங்கவேலு புகார் அளித்துள்ளார்.

கொள்ளைச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், மோப்ப நாய் உதவியுடன் தடயவியல் நிபுணர்களுடன் போலீசார் ஆதாரங்களை சேகரித்தனர்.

அதன்பிறகு, வீட்டில் கொள்ளை போனதற்கான அறிகுறி எதுவும் தெரியாததால், தங்கவேலுவிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், 500 சவரன் நகைகளின் விவரம் மற்றும் 8 லட்சம் ரூபாய்க்கான ஆவணங்களை கேட்டுள்ள போலீசார், கொள்ளையா அல்லது நாடகமா என விசாரித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக மதுரை மாநகர் குற்றப்பிரிவு துணை ஆணையர் ஜெயந்தி தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

Also see... கோடநாட்டில் கொள்ளை நடந்தபோது மின்சாரம் தடைபட்டது எப்படி? 
Loading...
First published: January 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...