Home /News /tamil-nadu /

மியான்மரில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்க வேண்டும் - பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

மியான்மரில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்க வேண்டும் - பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

முதலமைச்சர் ஸ்டாலின்

முதலமைச்சர் ஸ்டாலின்

மியான்மரில் சிக்கியுள்ளவர்களை பாதுகாப்பாக தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India
    மியான்மரில் சிக்கி தவிக்கும் 50 தமிழர்கள் உள்ளிட்ட 300 இந்தியர்களை அழைத்து வர விரைவான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    தாய்லாந்தில் தகவல் தொழில்நுட்ப துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலரை ஒரு கும்பல் அழைத்துச் சென்றுள்ளது. எனினும் அவர்களை தாய்லாந்து அழைத்துச் செல்லாமல், மியான்மர் நாட்டின் மியவாடி என்ற இடத்தில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. ஒரு நாளைக்கு 15 மணி நேரம் வேலைவாங்குவதாகவும், சட்டவிரோத பணிகளில் ஈடுபடுத்தப்படுவதாகவும் பிணைகைதிகளாக உள்ள இளைஞர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

    இதனிடையே மியான்மரில் சிக்கித்தவிக்கும் 50 தமிழர்கள் உட்பட 300 இந்தியர்களை விடுவித்து தாயகத்துக்கு அழைத்து வர நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

    இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு எழுதி உள்ள கடிதத்தில், மியான்மரில் இந்தியர்கள் கடும் இன்னல்களுக்கு ஆட்பட்டிருப்பதாக மாநில அரசுக்கு தகவல் கிடைத்துள்ளது என கூறியுள்ளார். தொடக்கத்தில் அவர்கள் தனியார் ஆட்சேர்ப்பு முகமைகள் மூலம் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான பணிக்கு தாய்லாந்துக்கு சென்றதாகவும் ஆன்லைனில் சட்டவிரோத வேலைகளை செய்வதற்காக தாய்லாந்தில் இருந்து மியான்மருக்கு கட்டாயப்படுத்தி அழைத்து செல்லப்பட்டது தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    சட்டவிரோத செயல்களை செய்ய மறுத்ததால் அவர்கள் கடுமையான தாக்குதலுக்கு ஆளாகியுள்ளதாகவும் முதலமைச்சர்  தெரிவித்துள்ளார். இதில் 17 தமிழர்களுடன் மாநில அரசு தொடர்பில் உள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், மியான்மரில் சிக்கியுள்ளவர்களை பாதுகாப்பாக தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்

    மியான்மரில் உள்ள தூதரகம் இப்பிரச்னை குறித்து விரைவாக நடவடிக்கை மேற்கொள்ள வெளியுறவு அமைச்சத்துக்கு அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்றும், பிரதமரிடம் முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

    Read More: வகுப்பறையில் மட்டுமே ஹிஜாப் அணிய தடை.. பள்ளி வளாகத்தில் இல்லை - உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகா வாதம்

    இந்நிலையில் மியான்மரில் உள்ள இந்திய தூதர் வினய் குமாரிடம் பிரச்னைக் குறித்து ஆலோசனை நடத்தியதாக வெளியுற இணையமைச்சர் முதளிதரன் தெரிவித்துள்ளார். ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், வினய் குமார், தற்போது அங்குள்ள சூழல் குறித்து விளக்கியதாகவும், சிக்கியுள்ளவர்களை மீட்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக  உறுதியளித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

     

     
    Published by:Srilekha A
    First published:

    Tags: CM MK Stalin, India, Myanmar, Tamilnadu

    அடுத்த செய்தி