நிரந்தர பணி என கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட செவிலியர்கள்... ஒப்பந்தம் அடிப்படையில் தான் நியமித்தோம் என கூறியதால் தர்ணா!

நிரந்தர பணி என கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட செவிலியர்கள்... ஒப்பந்தம் அடிப்படையில் தான் நியமித்தோம் என கூறியதால் தர்ணா!
தர்ணாவில் ஈடுபட்டுள்ள செவிலியர்கள்
  • Share this:
நிரந்தர செவிலியர் பணி என அழைத்து ஒப்பந்த அடிப்படையில் வேலை வாங்கியதாக கூறி டிஎம்எஸ் வளாகத்தில் 50-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னையில் கொரோனா நோயின் தாக்கம் அதிகரித்து வந்ததால்  தேர்வில் தேர்ச்சி பெற்று பிற மாவட்டங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய  52 செவியர்களை  நிரந்திர பணியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் சென்னையில் கொரோனா  தடுப்பு பணியில் ஈடுபடவேண்டும் என கடந்த ஏப்ரல் மாதம் சுகாதாரத்துறையினர் அழைத்ததன் அடிப்படையில் கடந்த மூன்று மாதங்களாக சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் கொரோனா பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு விதமான கொரோனா  தடுப்பு பணியில் செவிலியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் ஊதியம்  வழங்க வேண்டும் என அதிகாரிகளிடம் கேட்ட நிலையில் நீங்கள் நிரந்தரப் பணியாளர்கள் இல்லை ஒப்பந்த அடிப்படையில் தான் உங்களை பணியில் அமர்த்தி இருக்கிறோம் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்ததால் அதிர்ச்சி அடைந்த செவிலியர்கள் நிரந்தர பணி என கூறிவிட்டு ஒப்பந்த அடிப்படையில் வேலை வாங்கியதற்கு கண்டனம் தெரிவித்து சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Also read... இந்தியாவுடனான கூட்டணி புதிய உச்சத்தை தொட்டுள்ளது - பிரான்ஸ் தூதர் மகிழ்ச்சி

நிரந்தர பணி என கூறியதால் ஏற்கனவே பணியாற்றி வந்த வேலையை விட்டுவிட்டு சென்னையில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொண்ட இவர்கள், தங்களுக்கு அரசு முறையான எந்த வசதியும் செய்து தரவில்லை எனவும் தினமும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுவதால் தங்கள் பாதுகாப்பிற்காக தங்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என கேட்டபோது அதிகாரிகள் அதற்கு மறுப்பு தெரிவித்ததாகவும் போரட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மூன்று மாதமாக சம்பளம் வழங்காமல் நிரந்தர பணி ஆனை விரைவில் வரும் என தங்களை அரசு ஏமாற்றிவிட்டதாக கூறும் செவிலியர்கள் பணி நிரந்தரம் கிடைக்கும் வரை போரட்டத்தை கைவிடப்போவதில்லை என தெரிவிக்கின்றனர்.
First published: July 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading