• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • செம்பரம்பாக்கம் ஏரியில் ஒரேநாளில் நீர் மட்டம் கிடுகிடு உயர்வு

செம்பரம்பாக்கம் ஏரியில் ஒரேநாளில் நீர் மட்டம் கிடுகிடு உயர்வு

செம்பரம்பாக்கம் ஏரி

செம்பரம்பாக்கம் ஏரி

ஏரியின் மொத்த கொள்ளளவான 3,645 மில்லியன் கன அடியில் 2,895 மில்லியன் கன அடி நீர் நிரம்பியுள்ளது.

  • Share this:
    சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்பிடிப்பு பகுதியில் கன மழை பொய்ததால், ஒரே நாளில் 50 மில்லியன் கன அடி நீர் உயர்ந்துள்ளது. காலை நிலவரப்படி ஏரியின் மொத்த கொள்ளளவான 3,645 மில்லியன் கன அடியில் 2,895 மில்லியன் கன அடி நீரும், நீர்மட்டம் உயர்வான 24 அடியில் 21.15 அடி உயரம் தண்ணீர் நிரம்பியுள்ளது.

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுள் செம்பரம்பாக்கம் ஏரி முக்கியமானது. இதன் பரப்பளவு 6,303 ஏக்கர். இந்த ஏரி 3.6 டி.எம்.சி., கொள்ளளவு கொண்டது. மொத்த நீர் மட்ட உயரம் 24 அடியாக இருந்தாலும், மழை காலத்தில், அனையின் பாதுகாப்பை கருதி, 21 அடி நிரம்பியவுடனே, உபரி நீர் திறந்து விடுவது வழக்கம். இந்தாண்டு, ஜனவரி 5ஆம் தேதி உபரி நீர் திறக்கப்பட்டது. சில நாட்கள் கழித்து, உபரி நீர் திறப்பு நிறுத்தப்பட்டது. பின்னர் மீண்டும் பெய்த மழையால் இரண்டாவது முறையாக உபரி நீர் திறக்கப்பட்டது. கிருஷ்ணா நதி நீரால் ஏரியின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது.

    இந்நிலையில், நேற்று காலை முதல் பெய்த மழையால், ஏரியின் நீர்மட்டம் 21 அடியாக உயர்ந்துள்ளது. 2,840 மில்லியன் கன அடி நீர் இருப்பு இருந்தது. கன மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியிக்கு வினாடிக்கு 715 கன அடி நீர் வரத்து வந்து கொண்டிருக்கிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பொய்ததால் ஒரே நாளில் 50 மில்லியன் கன அடி நீர் உயர்ந்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் காலை நிலவரப்படி மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கன அடியில் 2895 மில்லியன் கன அடி நீரும், நீர்மட்ட உயர்வான 24 அடியில் 21.15 அடியாக உள்ளது.

    இதேபோல தமிழகத்தில் ஆங்காங்கே பெய்துவரும் கனமழை காரணமாக, பல்வேறு நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. அந்த வகையில், தேனி மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் இதுவரை நீர்வரத்தின்றி காணப்பட்ட மஞ்சளாறு அணைக்கு 90கன அடியும், சண்முகா நதி அணைக்கு 10கன அடி நீரும் வந்து கொண்டிருக்கிறது. மேலும் ஏற்கனவே முழுக் கொள்ளளவை எட்டி நிரம்பி வழியும் சோத்துப்பாறை அணைக்கு விநாடிக்கு நீர் வரத்து 197கன அடியாக உள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு குரங்கு அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் முழுவதும் நேற்று காலை முதல் தொடர் மழை பெய்ததால், திருவாரூர் மாவட்டம் மாவூர், கச்சனம், கொரடாச்சேரி, விக்கிரபாண்டியம், இருள்நீக்கி, மன்னார்குடி, கோட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த குருவை நெற்பயிர் 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மழை நீரில் மூழ்கியுள்ளது.

    Must Read : பாலத்தை தாண்டி செல்லும் மழைநீர் : அவசர தேவைக்கு வெளியே செல்லமுடியாமல் தவிக்கும் கிராம மக்கள்

    இந்நிலையில், கேரளாவில் பெய்து வரும் தொடர் மழையால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து 2,184கன அடியாக அதிகரிப்பு. நீர் மட்டம் 128அடியை கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: