Home /News /tamil-nadu /

தமிழகத்தில் 50 லட்சம் பேர் பா.ஜ.கவில் சேர்ந்துள்ளனர்- பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் 50 லட்சம் பேர் பா.ஜ.கவில் சேர்ந்துள்ளனர்- பொன்.ராதாகிருஷ்ணன்

பொன்.ராதாகிருஷ்ணன்

பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழக மக்கள் ஏங்கி நிற்க கூடிய விஷயம் தூய்மை, நேர்மை அரசியலில் அப்பழுக்கற்ற தன்மை ஆகியவை இந்த யாத்திரை மூலம் மக்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
    தமிழகத்தில் சுமார் 50 லட்சம் பேர் பா.ஜ.கவில் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர் என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

    பா.ஜ.க தேசியத் தலைவர் அமித்ஷா மற்றும் தேசிய செயல் தலைவர் J.P.நட்டா ஆகியோர் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் பா.ஜ.க மாநில நிர்வாகிகளுடனும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் உரையாடினர்.

    இந்த நிகழ்வில் பா.ஜ.க முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க மூத்த தலைவர் இல.கணேசன், வானதி சீனிவாசன், கே.டி.ராகவன் உட்பட மாநில நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

    பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன், ‘‘மஹாத்மா காந்தியின் பிறந்தாளை முன்னிட்டு அக்கோடபர் 2-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை பாதயாத்திரை நடத்தவுள்ளோம். இந்த யாத்திரையில் பா.ஜ.கவைச் சேர்ந்த அனைத்து சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து மாநிலத்திலும் உள்ள பா.ஜ.கவின் உறுப்பினர்கள் என அனைவரும் கலந்து கொள்ளவுள்ளனர். இதில் பொதுமக்கள் கலந்து கொள்ளலாம். இதில், பா.ஜ.கவின் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள், மற்ற மாநில முதல்வர்கள் என அனைவரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

    இந்த யாத்திரை முடியும் போது அதிக நபர்கள் மற்றும் அதிக தூரம் சென்ற யாத்திரையாக உலக அளவில் முக்கியத்துவம் பெறும். இந்த யாத்திரையின் முடிவிற்குப் பின்னர் தமிழக மக்களிடம் நல்ல மாற்றங்கள் உண்டாகும்.

    தமிழகத்தில் பா.ஜ.கவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்  இல்லாத காரணத்தினால், பா.ஜ.கவின் பொறுப்பாளர்கள் உள்ள இடங்களில் இந்த யாத்திரை மேற்கொள்ளப்படும்.

    தமிழக மக்கள் ஏங்கி நிற்க கூடிய விஷயம் தூய்மை, நேர்மை, அரசியலில் அப்பழுக்கற்ற தன்மை ஆகியவை இந்த யாத்திரை மக்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த யாத்திரை என்பது மக்களுக்கான யாத்திரை. அதனால் யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம்’’ என்றார்.

    அதனைத் தொடர்ந்து, யாத்திரையில் பாஜக கட்சிக் கொடி பயன்படுத்தப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ‘‘மற்ற கட்சியைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டாலும் அவர்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படும். குறிப்பாக யாருடைய வருகையும் பாதிக்காத வண்ணம் யாத்திரைக்கான ஏற்பாடுகள் செய்யப்படும். யாத்திரையில் கட்சிக் கொடியை விட தேசியக்கொடிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். தமிழகத்தில் சுமார் 50 லட்சம் பேர் பா.ஜ.கவில் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர்’’ என்று கூறினார்.

    Published by:Ilavarasan M
    First published:

    Tags: Pon Radhakrishnan

    அடுத்த செய்தி