Home /News /tamil-nadu /

அதிமுகவின் 50 எம்எல்ஏக்கள், 2 எம்.பிகள் எங்களிடம் தொடர்பில் உள்ளனர் - ஆர்.எஸ்.பாரதி பதிலடி

அதிமுகவின் 50 எம்எல்ஏக்கள், 2 எம்.பிகள் எங்களிடம் தொடர்பில் உள்ளனர் - ஆர்.எஸ்.பாரதி பதிலடி

எடப்பாடி பழனிசாமி - ஆர்.எஸ்.பாரதி

எடப்பாடி பழனிசாமி - ஆர்.எஸ்.பாரதி

10 திமுக எம்எல்ஏக்களின் பெயர்களை எடப்பாடி வெளியிட்டால் 50 பேரின் பெயர்களை நாங்கள் வெளியிட தயார் - ஆர்.எஸ்.பாரதி

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai [Madras], India
    அதிமுகவின் 50 எம்எல்ஏக்கள், இரண்டு எம்பிக்கள், 30 மாவட்டச் செயலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக எடப்பாடி பழனிசாமிக்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலடி கொடுத்துள்ளார்.

    திருவள்ளூரில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்த போது எங்களுடன் 10 திமுக எம்எல்ஏக்கள் தொடர்பில் இருக்கிறார்கள் என கூறி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தினார். எடப்பாடி பழனிசாமி கூறிய அந்த எம்எல்ஏக்கள் யார் என்ற கேள்வி தான் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.

    எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களிடம் கூறுகையில், அதிமுகவை சேர்ந்த 50 எம்எல்ஏக்கள், இரு எம்பிக்கள், 30 மாவட்டச் செயலாளர்கள் எங்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள். 10 திமுக எம்எல்ஏக்களின் பெயர்களை எடப்பாடி வெளியிட்டால் 50 பேரின் பெயர்களை நாங்கள் வெளியிட தயார்.

    Also Read : தேசிய கொடி பாஜகவின் சொத்தா? பாதயாத்திரை பொதுக்கூட்டத்தில் ராகுல் விமர்சனம்

    ராகுல்காந்தியின் யாத்திரை என்பது பாஜகவுக்கு அதிர்ச்சி தரும் செய்தியாக உள்ளது. கடந்த தேர்தலில் 37 சதவீத ஓட்டுக்கள் வாங்கி தான் பிரதமராக நரேந்திர மோடி ஆனார். கடந்த தேர்தலில் 63 சதவீத ஓட்டுக்கள் என்பது மோடிக்கு எதிர்ப்பாக வந்துள்ளது. இத்தகைய 63 சதவீத ஓட்டுக்களையும் ஒன்றாக திரட்டும் பணியில் தான் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி ஆகியோர் ஈடுபட்டுள்ளனர் என்றுள்ளார் ஆர் எஸ் பாரதி.
    Published by:Vijay R
    First published:

    Tags: ADMK, DMK, DMK executive RS Bharadhi

    அடுத்த செய்தி