இட்லி சாப்பிட மறுத்த 5 வயது சிறுமி அடித்துக் கொலை... கொடூர சம்பவத்தின் பின்னணி

விளையாட்டு ஆசையில் இட்லி வேண்டாம் என்று கூறி விட்டு பக்கத்து வீட்டுக் குழந்தைகளுடன் விளையாடச் சென்று விட்டார் ரென்சிமேரி.

  • News18 Tamil
  • Last Updated: September 10, 2020, 5:51 PM IST
  • Share this:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இட்லி சாப்பிட மறுத்த 5 வயது பெண் குழந்தையை அடித்துக் கொலை செய்த பெரியம்மா கைது செய்யப்பட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள மேல்விழி கிராமத்தைச் சேர்ந்தவர் 35 வயதான ஆரோக்கியமேரி; இவரது தாய் 70 வயதான பச்சையம்மாள். ஆரோக்கியமேரிக்கு திருமணமாகவில்லை; கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த தனது தங்கை ஜெயராணியின் மகள் 5 வயதான ரென்சிமேரியை வளர்த்து வந்தார்

செவ்வாய்க்கிழமை காலை பச்சையம்மாள் வேலைக்கு சென்று விட்ட நிலையில், குழந்தை ரென்சிமேரிக்கு இட்லி ஊட்டியுள்ளார் ஆரோக்கியமேரி. ஆனால் விளையாட்டு ஆசையில் இட்லி வேண்டாம் என்று கூறி விட்டு பக்கத்து வீட்டுக் குழந்தைகளுடன் விளையாடச் சென்று விட்டார் ரென்சிமேரி.


ஆத்திரமடைந்த ஆரோக்கியமேரி சாலையில் விளையாடிக் கொண்டிருந்த ரென்சிமேரியை அடித்து தரதரவென வீட்டிற்கு இழுத்து வந்து சரமாரியாக அடித்து கட்டையாலும் தாக்கியுள்ளார். வலி தாங்க முடியாமல் குழந்தை அலறிய சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். கிராம நிர்வாக அலுவலர் புகாரின் பேரில், போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து ஆரோக்கியமேரியைக் கைது செய்தனர்.இட்லி சாப்பிட மறுத்த குழந்தையை பெரியம்மா அடித்தே கொலை செய்த சம்பவம் மேல்விழி கிராமத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
First published: September 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading