5 வருட காதல்.. கணவன் - மனைவியாக வாழ்க்கை.. சாதியை காரணம் காட்டி திருமணம் செய்ய மறுத்த காதலன் கைது!
5 வருட காதல்.. கணவன் - மனைவியாக வாழ்க்கை.. சாதியை காரணம் காட்டி திருமணம் செய்ய மறுத்த காதலன் கைது!
சாதியை காரணம் காட்டி திருமணத்திற்கு மறுத்த காதலன் கைது!
பெண் வழக்கறிஞர் முரளியிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கூறியுள்ளார். அதற்கு முரளி நீ தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் எனக் கூறி திருமணம் செய்து கொள்ள முடியாது என இழிவு படுத்தியுள்ளார்.
ஐந்து வருடங்களாக காதலித்து கணவன் மனைவியாக வாழ்ந்து வந்த காதலியை சாதியை காரணம் காட்டி திருமணம் செய்ய மறுத்த வழக்கறிஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் பகுதியை சேர்ந்தவர் முரளி (வயது 37). இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் முரளி அவருடன் பணிபுரியும் பல்லாவரம் பகுதியை சேர்ந்த 27 வயதுடைய பெண் வழக்கறிஞர் ஒருவருடன் நட்பாக பழகி வந்துள்ளார். நாளடைவில் நட்பு காதலாக மாறி கடந்த ஐந்து வருடங்களாக இருவரும் காதலித்து கணவன் மனைவியாகவே வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பெண் வழக்கறிஞர் முரளியிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கூறியுள்ளார். அதற்கு முரளி நீ தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் எனக் கூறி திருமணம் செய்து கொள்ள முடியாது என இழிவு படுத்தியுள்ளார்.
இதனால் மனமுடைந்த பெண் வழக்கறிஞர் இதுகுறித்து பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் வழக்கறிஞர் முரளியை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Published by:Esakki Raja
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.