Home /News /tamil-nadu /

5 வயது சிறுமி கடத்தி கொலை: குற்றவாளியை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியல்!

5 வயது சிறுமி கடத்தி கொலை: குற்றவாளியை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியல்!

குழந்தையின் சடலத்தை சுற்றிவைத்திருந்த டிசர்ட்

குழந்தையின் சடலத்தை சுற்றிவைத்திருந்த டிசர்ட்

பால் மனம் மாறாத சிறுமியை, உடல் முழுவதும் காயங்கள் ஏற்படுத்தி, கொடூர முறையில் கொலை செய்த சம்பவம் பதபதைக்க வைக்கிறது. திரைப்படங்களில் வரும் காட்சிகளைப்போல, சின்னஞ்சிறு சிறுமி கொலை செய்யப்பட என்ன காரணம்.....?

  • News18
  • Last Updated :
கோவையில் நடந்த சிறுமி கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளியை கைது செய்யக்கோரி, உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். குற்றவாளியைப் பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக கோவை போலீசார் தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டம் துடியலூரை அடுத்த பன்னிமடை கஸ்தூரிநாயக்கன்புதூரில் கனபிரதீப்-வனிதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். துப்புரவு தொழிலாளர்களான இவர்களுக்கு 5 மற்றும் 4 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். 5 வயதான முதல் குழந்தை திப்பனூரில் உள்ள அரசுப் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார்.

திங்கள்கிழமை காலை வழக்கம் போல பள்ளிக்குச் சென்றுவிட்டு மாலை வீடு திரும்பிய அந்த மாணவி, வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென காணாமல் போனதால், அவரது தங்கை தேடியுள்ளார். பின்னர் தனது பெற்றோரிடம் கூற, அவர்களும் தனது மகளைத் தேடினர்.

சிறுமி கிடைக்காததால் அதிர்ச்சியடைந்த கனபிரதீப்பும் அவரது மனைவி வனிதாவும் தடாகம் காவல்நிலையத்தில், புகார் கொடுத்தனர். புகாரின் அடிப்படையில் இரவு 8 மணி முதல் அதிகாலை 2 மணி வரை போலீசாரும் உறவினர்களும் தேடி வந்தனர். நள்ளிரவு வரை தேடியும் சிறுமியை கண்டுபிடிக்க முடியாத நிலையில், நேற்று காலையில்,கனபிரதீப்-வனிதா வீட்டிற்கு அருகே உள்ள சிறிய சந்தில் உடல் முழுவதும் காயங்களுடன் சடலமாக சிறுமி மீட்கப்பட்டார்.

முகத்தில் டிசர்ட் சுற்றுப்பட்டு சடலமாக சிறுமியை மீட்ட காவல்துறையினர், உடலை பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமியின் சடலம் விஜயகுமார் என்பவரின் வீட்டருகே கண்டுபிடிக்கப்பட்டதால், கொலைக்கும் அவருக்கு தொடர்பு இருக்கலாம் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி சிறுமியின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து, மருத்துவமனை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனிடையே சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்களை, கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி, பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூன்ஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

இதனிடையே விஜயகுமாரை சந்தேகத்தின் பேரில் பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 10 தனிப்படைகள் அமைத்து, குற்றவாளிகளை தேடி வருவதாக, காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Also see... சுயேட்சையாக மனுதாக்கல் செய்வதால் டிடிவி தினகரனுக்கு சாதகமா? 
Published by:Vaijayanthi S
First published:

Tags: Coimbatore, Girl Murder

அடுத்த செய்தி