ஊரடங்கை தீவிரப்படுத்துதல், அனைத்து கட்சி ஒத்துழைப்பு - சட்டமன்ற பிரதிநிதிகள் கூட்டத்தில் 5 தீர்மானம் நிறைவேற்றம்

தலைமைச் செயலகம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற சட்டமன்றப் பிரதிநிதிகள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

 • Share this:
  தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்துவருகிறது. நாள் ஒன்றுக்கு கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 30,000-த்தைக் கடந்துள்ளது. நாள் ஒன்றுக்கு 300 பேர் வரை உயிரிழந்துவருகின்றனர். கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் கடந்த திங்கள்கிழமை முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  இருப்பினும், ஊரடங்கு கட்டுப்பாடுகள் சரியாக பின்பற்றப்படவில்லை எனும் குற்றச்சாடுகள் எழுந்துவருகிறது. பொதுமக்கள் ஊரடங்கு கட்டுபாடுகளின் முக்கியத்துவம் குறித்து அறியாமல் வெளியில் சுற்றுவதாக செய்திகள் வெளிவந்தன. இந்தநிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற பிரதிநிதிகள் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. சுமார், 2.30 மணி நேரம் இந்தக் கூட்டம் நடைபெற்றது.

  இந்தக் கூட்டத்தில் 13 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தின் தொடக்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவருடைய செயல்பாடுகள் குறித்த விளக்கத்தை அளித்தார். அதன் தொடர்ச்சியாக அனைத்து கட்சி தலைவர்களுடன் ஒப்புதலுடன் ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

  ஐந்து தீர்மானங்கள்:

  1.அரசியல் கட்சிகளின் கூட்டங்களை நிறுத்த தீர்மானம்
  2. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அனைத்து கட்சிகளும் முழு ஒத்துழைப்பு வழங்க தீர்மானம்
  3.கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்க அனைத்து கட்சி குழு
  4.கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை களத்தில் செயல்படுத்த அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்படுதல்
  5.ஊரடங்கு கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்த தமிழக முதல்வர் அனுமதி


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: