ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பைக் பறிமுதலால் இளைஞர் தீக்குளிப்பு - ஆம்பூரில் 5 போலீசார், ஊர்காவல் படையினர் பணியிட மாற்றம்

பைக் பறிமுதலால் இளைஞர் தீக்குளிப்பு - ஆம்பூரில் 5 போலீசார், ஊர்காவல் படையினர் பணியிட மாற்றம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

விசாரணை நலன் கருதி தொடர்புடைய காவலர்கள் மற்றும் ஊர்காவல் படையினர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

ஆம்பூரில் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்ததால் இளைஞர் தீக்குளித்த விவகாரத்தில், 5 போலீசார் மற்றும் ஊர்காவல் படையினர் திருப்பத்தூர் நகர போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகம் முழுக்க நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்ட நிலையில் ஆம்பூரை சேர்ந்த 27 வயது நிரம்பிய முகிலன் ஓ.ஏ.ஆர் திரையரங்கம் அருகே தனது இருசக்கர வாகனத்தில் சென்றிருக்கிறார்.

அங்கு கொரோனா நோய் தொற்று தடுப்புப்பணியில் ஈடுபட்டு வந்த போலீசார் முகிலனை இடைமறித்து அவரது வாகனத்தை பறிமுதல் செய்திருக்கின்றனர். இதனால் மனமுடைந்த முகிலன் தனது அக்கா வீட்டிற்கு சென்று மண்ணெண்ணை எடுத்து வந்து வாகனம் பறிமுதல் செய்த இடத்தில் தீக்குளித்தார்.

Also read... கெத்து காட்டலாம் என்ற எண்ணத்தில் வெறிச்செயல்: கூலித் தொழிலாளியை கொன்ற இளைஞர் கைது..

இதனை அடுத்து மீட்கப்பட்ட அவர் 90 சதவீத தீக்காயத்துடன் சி.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் பிரவீன்குமார் தலைமையில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளதோடு,

விசாரணை நலன் கருதி தொடர்புடைய காவலர்கள் மற்றும் ஊர்காவல் படையினர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.

மாநில உதவிமையம்: 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

First published:

Tags: Ambur