அரசு அதிகாரி மீது வாகனத்தை ஏற்றி கொலை... மனைவி, கார் ஓட்டுநர் உள்பட 5 பேர் கைது...!

சாலையில் நடந்து வந்த சிவபாலாஜியை பாண்டி மற்றும் அவரது நண்பர்கள் காரை ஏற்றி கொலை செய்தனர். இந்த கொலையில் சிவபாலாஜி மனைவி உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

அரசு அதிகாரி மீது வாகனத்தை ஏற்றி கொலை... மனைவி, கார் ஓட்டுநர் உள்பட 5 பேர் கைது...!
மாதிரிப்படம்
  • News18
  • Last Updated: October 28, 2019, 12:22 PM IST
  • Share this:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே அரசு அதிகாரி மீது காரை ஏற்றியும் முகத்தை கல்லால் தாக்கியும் கொலை செய்ததாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

நத்தம் மீனாட்சிபுரத்தை சேர்ந்த அரசு அதிகாரி சிவபாலாஜியின் மனைவிக்கும், அதே பகுதியை சேர்ந்த கார் ஓட்டுனர் பாண்டி என்பவருக்கும் இடையே திருமண பந்தத்தை மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது.

இதை அறிந்த சிவபாலாஜி இருவரையும் கண்டித்துள்ளார். இந்நிலையில் மதுபோதையில் பாண்டியின் நண்பர்களுக்கும், சிவபாலாஜிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானதாக கூறப்படுகிறது.

சாலையில் நடந்து வந்த சிவபாலாஜியை பாண்டி மற்றும் அவரது நண்பர்கள் காரை ஏற்றி கொலை செய்தனர். இந்த கொலையில் சிவபாலாஜி மனைவி உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Also see...

First published: October 28, 2019, 12:22 PM IST
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading