அரிசி மீது 5 விழுக்காடு ஜிஎஸ்டி விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் அரிசி ஆலைகள் மற்றும் கடைகளை அடைத்து உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பையில் அடைத்து விற்கப்படும் அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கும் 5 சதவீத ஜிஎஸ்டி வரி செலுத்தவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது, வரும் 18ம் தேதி ( திங்கட்கிழமை) அமலுக்கு வர உள்ளது. அரிசிக்கு5 சதவீதம் ஜிஎஸ்டி அமல்படுத்தினால் ஒரு கிலோவுக்கு ரூ.3 முதல் ரூ.5 வரை விலை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், ஜிஎஸ்டி கவுன்சிலின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் இன்று அரிசு ஆலைகள், கடைகளை அடைத்து உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகளும் 500 க்கும் மேற்பட்ட மொத்த மற்றும் சில்லரை அரிசி விற்பனை கடைகளும் மூடப்பட்டுள்ளன. மக்களை பாதிக்கும் 5 விழுக்காடு ஜி.எஸ்.டி வரியை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டுமென வலியுறுத்தி கடைகளை முழுமையாக அடைத்து போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
மத்திய அரசு கொண்டு வந்த ஐந்து சதவீத ஜிஎஸ்டி வரியை வாபஸ் செய்யக்கோரி திண்டுக்கல்லில் 177 மொத்த அரிசி வியாபார கடைகள், 55 சிறிய அரிசி விற்பனையாளர் கடைகள் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் சுமார் ஒரு கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கபட்டுள்ளது .
இதையும் படிங்க: மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் ரத்தா? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
சேலத்தில் நெல் அரிசி உணவுப்பொருள் மொத்த வியாபாரிகள் சங்கம் சார்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் சேலம் மாநகரில் மட்டும் சுமார் 600 டன் அளவிற்கு அரிசி வியாபாரம் பாதிக்கப்படும் என தெரிவித்துள்ள வியாபாரிகள், அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.
ஆலைகள் மற்றும் கடை அடைப்பு போராட்டம் தமிழகம் மட்டுமல்லாது, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலங்கானா, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மேற்கு வங்காளம், சத்தீஷ்கர் உள்பட சில மாநிலங்களிலும் நடைபெற்று வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: GST, GST council, Rice