• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சிறுத்தைப் புலி தாக்கியதில் 5 பேர் காயம்: பீதியில் வேலூர் மக்கள்!

சிறுத்தைப் புலி தாக்கியதில் 5 பேர் காயம்: பீதியில் வேலூர் மக்கள்!

சிறுத்தைப்புலி

சிறுத்தைப்புலி

தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்த போது ஊர் இளைஞர்கள், சிறுத்தை பதுங்கியிருந்த இடம் நோக்கி கற்களை எறிந்தனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே சிறுத்தைப்புலி தாக்கி 5 பேர் படுகாயமடைந்தனர்.

    வேலூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் தமிழக, ஆந்திர எல்லைப்பகுதியான கொல்லப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் கடந்த பதினைந்து நாட்களாக சிறுத்தைப்புலி நடமாட்டம் காணப்படுகிறது.  இச்சூழலில் சிக்கனாங்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட நாகலேரி பகுதிக்குள் இன்று அதிகாலை நுழைந்த சிறுத்தைப்புலி தாக்கியதில் பெண் உட்பட இருவர் காயமடைந்தனர்.

    உடனே ஊர் இளைஞர்கள் சிலர் ஏரி அருகே திரண்ட போது பதுங்கியிருந்த சிறுத்தைப்புலி மீண்டும் தாக்கவே சந்தோஷ் என்பவர் காயமடைந்தார்.   இதையடுத்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஏரிப்பகுதியில் குவிந்தனர்.  தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்த போது ஊர் இளைஞர்கள், சிறுத்தை பதுங்கியிருந்த இடம் நோக்கி கற்களை எறிந்தனர். ஏற்கெனவே அச்சத்தில் இருந்த சிறுத்தை இதனால் ஆவேசமடைந்து சீறிப் பாய்ந்து வந்து தாக்கியது.

    சிறுத்தை மீண்டும் தாக்கியதில் கமல், யுவன்குமார் ஆகியோர் காயமடைந்தனர்.  சிறுத்தைப்புலி தற்போது முட்புதரில் ஒளிந்திருக்கும் நிலையில் அதனைக் கூண்டு வைத்துப் பிடிக்க வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: