முகப்பு /செய்தி /தமிழ்நாடு / Omicron Variant | தமிழகத்தில் மேலும் 5 பேருக்கு ஒமைக்ரானுக்கு முந்தைய அறிகுறி - ராதாகிருஷ்ணன்

Omicron Variant | தமிழகத்தில் மேலும் 5 பேருக்கு ஒமைக்ரானுக்கு முந்தைய அறிகுறி - ராதாகிருஷ்ணன்

ராதாகிருஷ்ணன்

ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் மேலும் 5 பேருக்கு ஒமைக்ரானுக்கு முந்தைய அறிகுறி கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தமிழகத்தில் இதுவரை ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. துக்க நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக நைஜீரியாவிலிருந்து தோஹா வழியாக கடந்த 10ஆம் தேதி சென்னை வந்த நபருக்கு விமான நிலையத்திலேயே மாதிரி எடுக்கப்பட்டது. ஆபத்து இல்லாத நாட்டிலிருந்து வந்ததால், அந்த நபர், வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

மூன்று மணிநேரத்தில் வெளியான முடிவில், அந்த நபருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. வீட்டிலிருந்த அந்த மூன்று மணி நேரத்தில் அவரது குடும்ப உறுப்பினர்கள் 6 பேருக்கு தொற்று பரவியுள்ளது. அவர்களுக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகே, அறிகுறி தென்பட்டதால், மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் எஸ் மரபணுவில் மாற்றங்கள் உறுதிசெய்யப்பட்டது.

Also Read : ஒமைக்ரான் அச்சுறுத்தல்.. பள்ளி வகுப்புகள் குறித்து 25-ம் தேதி முக்கிய அறிவிப்பு - அமைச்சர் அன்பில் மகேஷ்

இதனால், அவர்களுக்கு ஒமைக்ரான் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. விமானத்தில் அந்த நபருடன் பயணித்த சென்னையைச் சேர்ந்த மற்றொரு நபருக்கும் எஸ் மரபணு மாற்றம் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

நேற்று ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்ட நபருடன் பயணித்த ராமாபுரத்தை சேர்ந்த பயணியுடன் தொடர்பில் இருந்த 5 பேருக்கு S ஜீன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கிங் மருத்துவமனையில், ஒமிக்ரான் தொற்று உள்ளவர் உட்பட 13 நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

Also Read : குழந்தைகளுக்கான தடுப்பூசி விரைவில் அறிமுகம் : சீரம் நிறுவனம் அறிவிப்பு

ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்ட நபர் சென்ற மார்க்கெட், திருமணம், இறந்த வீடு உள்ளிட்ட பகுதிகளில் 219 நபர்களுக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 15 நாடுகளில் இருந்து வந்த 12,513 பேருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

First published:

Tags: Omicron