ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

Headlines Today : தருமபுரியில் தேர் சாய்ந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் நிதியுதவி - தலைப்புச் செய்திகள் (ஜூன் 14, 2022)

Headlines Today : தருமபுரியில் தேர் சாய்ந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் நிதியுதவி - தலைப்புச் செய்திகள் (ஜூன் 14, 2022)

தருமபுரியில் தேர் கவிழ்ந்து விபத்து... 2 பேர் உயிரிழப்பு!!

தருமபுரியில் தேர் கவிழ்ந்து விபத்து... 2 பேர் உயிரிழப்பு!!

Headlines Today : தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள மாதேஹள்ளி கிராமத்தில் தேர் சாய்ந்த விபத்தில் மனோகரன் மற்றும் சரவணன் ஆகிய இருவா் உயிரிழந்தனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

தருமபுரி மாவட்டத்தில் வயல் வெளியில் கோவில் தேர் சாய்ந்த விபத்தில் உயிரிழந்த 2 பேர் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மேகதாது அணை திட்டம் குறித்து காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில், விவாதிக்கக் கூடாது என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அதிமுக தலைமை நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்களின் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

உட்கட்சித் தேர்தல் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதிப்பதற்காக தேமுதிக-வின் மாவட்ட வாரியான நிர்வாகிகள் கலந்துகொள்ளும் மூன்று நாள் கூட்டம் இன்று தொடங்குகிறது.

அரசு பள்ளி ஆசிரியர்கள் விடுப்பு மற்றும் பிற பணி சார்ந்த தேவைகளுக்கு விண்ணப்பிப்பதற்கான செயலியை பள்ளிக் கல்வித் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கும் சட்ட திருத்தத்திற்கு, எதிரான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

ஈரோடு சிறுமியிடம் சினைமுட்டை எடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக திருவனந்தபுரம் மற்றும் திருப்பதியில் உள்ள மருத்துவமனைகளுக்கு மருத்துவத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே ஆடு திருடியவரை காலால் எட்டி உதைத்த உதவி ஆய்வாளர் தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கும்பகோணம் அருகே சாதி மறுப்பு திருமணம் செய்த காதல் தம்பதி படுகொலை. விருந்து வைப்பதாக கூறி வீட்டிற்கு வரவழைத்து வெட்டிக்கொன்ற அண்ணன் கைது.

பெரம்பலூர் அருகே கோயிலில் நடை சாத்தப்பட்டபிறகு சாமி தரிசனம் செய்ய வந்த இளைஞர்களுக்கும், அர்ச்சகர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் சேவுகமூர்த்தி அய்யனார் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு தேரடி படிகளில் 5 லட்சம் தேங்காய்கள் உடைக்கப்பட்டன.

ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களுக்குத் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திரக் கொண்டாட்டத்தையொட்டி, குறிப்பிட்ட சிறைக்கைதிகளை மூன்று கட்டங்களாக விடுவிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் சுமார் 10 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

டெல்லி போராட்டத்தின்போது காவலர்கள் தள்ளிவிட்டதால் ப.சிதம்பரத்துக்கு விலா எலும்பு முறிவு. நலமுடன் இருப்பதாக டிவிட்டரில் சிதம்பரம் விளக்கம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கேரளாவில் முதலமைச்சர் பினராயி விஜயன் பதவிவிலக வலியுறுத்தி, அவர் பயணம் செய்த விமானத்திலேயே இளைஞர் காங்கிரஸார் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாதுகாப்புப் படைகளில் 4 ஆண்டுகளுக்கு மட்டுமே பணியாற்றும் வகையில், இளைஞர்களை தேர்வுசெய்வதற்கான அக்னிபாத் என்ற திட்டம் இன்று அறிவிக்கப்படலாம்.

Must Read : மேகதாது அணை: தமிழக அரசுக்கு பாஜக துணை நிற்கும் - அண்ணாமலை

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான போட்டியில் தான் இல்லை என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் விளக்கம் அளித்துள்ளார்.

44 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏலம் போனது ஐபிஎல் ஒளிபரப்பு உரிமம். தொலைக்காட்சி உரிமத்தை பெற்றது டிஸ்னி ஹாட்ஸ்டார்.

தேசிய சீனியர் தடகளப் போட்டியில் தமிழக வீராங்கனை கிரேஷினா தங்கம் வென்றார்.

இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையேயான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.

உலக டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் தரவரிசை பட்டியலில் ரஷ்ய வீரர் டேனியல் மெத்வதேவ் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.

First published:

Tags: Headlines, Today news, Top News