தூத்துக்குடி மணியாச்சி அருகே சிறிய ரக லோடு வாகனம் கவிழ்ந்து விபத்து: 5 பேர் உயிரிழப்பு

சாலை விபத்து

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

 • Share this:
  தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி அருகே சிறிய ரக லோடு வாகனம் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

  திருநெல்வேலி மாவட்டம் மணப்படை சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து, விவசாய வயல்களில் கூலி வேலை செய்வதற்காக தூத்துக்குடி மாவட்டத்திற்கு விவசாய தொழிலாளர்கள் சென்று கொண்டிருந்தனர்.

  அவர்கள் சென்ற லோடு வாகனம் மணியாச்சியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஐந்து பெண்கள் உயிரிழந்தாகவும், மேலும் பலர் காயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

  இந்நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுவதாக தகவல்கள் வெளியாகி இருகின்றன.
  Published by:Suresh V
  First published: