ரேஷன் கடைகளில் கரிப் கல்யாண் திட்டத்தில் அடுத்த 5 மாதத்திற்கு கூடுதலாக 5 கிலோ இலவச அரிசி!

அடுத்த 5 மாதத்திற்கு கூடுதலாக 5 கிலோ இலவச அரிசி

மத்திய அரசு 18 ரூபாய்க்கு நெல்லை கொள்முதல் செய்து, 1 கிலோ அரிசிக்கு 38 வரை செலவு செய்கிறது. அதனை மாநில அரசுகள் அரிசி 3 ரூபாய்க்கும், கோதுமை 2 ரூபாய்க்கும் விற்பனை செய்கிறது.

  • Share this:
பிரதமரின் ஏழைகள் நலன் காக்கும் உணவு பாதுகாப்பு திட்டம் மூலம் பொதுமக்களுக்கு இலவச உணவு பொருட்கள் வழங்கி வருவது குறித்து சென்னையில் உள்ள மத்திய அரசு அலுவலகமான சாஸ்திரி பவனில், தென் மண்டல இந்திய உணவு கழக இயக்குனர் நசீம் மற்றும் தமிழக பொது மேலாளர் சைஜூ ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய அவர்கள், பஞ்சாப், ஹரியானா, மாநிலங்களில் அரிசியை கொள்முதல் செய்து, நம் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வருகிறது என்றும் கடந்த ஏப்ரல் 20 முதல் நவ 20 வரை பிரதம மந்திரி கரிப் கல்யாண் திட்டத்தில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன என்றார்.

மேலும் மத்திய அரசு 18 ரூபாய்க்கு நெல்லை கொள்முதல் செய்து, 1 கிலோ அரிசிக்கு 38 வரை செலவு செய்கிறது. அதனை மாநில அரசுகள் அரிசி 3 ரூபாய்க்கும், கோதுமை 2 ரூபாய்க்கும் விற்பனை செய்கிறது.
இந்நிலையில் கொரோனா நேரத்தில் 80 கோடி மக்களுக்கு எப்போதும் வழங்கப்படும் 5 கிலோ அரிசியை விட கூடுதலாக 5 கி. அரசி வழங்க தான் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது.

Also Read:   "கர்நாடக காங்கிரஸ் தலைவர் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது"- தமிழக காங். பிரமுகர் காட்டம்!

அதன்படி தமிழகத்தில் 1 கோடி 12 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு, கூடுதலாக 5 கிலோ அரிசியை கடந்த ஏப்ரல் முதல் நவம்பர் வரை இலவசமாக வழங்கி உள்ளதாக தெரிவித்தார்.  அதேபோல் இரண்டாம் அலையின் காரணமாக, மே, ஜூன் மாதத்தில் மீண்டும் இந்த திட்டத்தின் கீழ் அரிசியை இலவசமாக வழங்க தொடங்கி விட்டதாக கூறினார்.

அரிசி வழங்கல்


எனவே கொரோனா காரணமாக, 16.5 லட்சம் டன் அரிசி, 7 ஆயிரத்து 588 கோடி மதிப்பில், இலவசமாக அரிசி வழங்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி அடுத்த 5 மாதத்திற்கு இலவசமாக, கூடுதலாக 5 கிலோ அரசி  வழங்க வேண்டும் என்று பிரதமர் கூறியுள்ளார்.
இதற்காக கூடுதலாக 9 லட்சம் டன் கொண்டு வர உள்ளதாகவும், அதில் 8.5 லட்சம் டன் அரிசியும், 91 ஆயிரம் டன் கோதுமையும் கொள்முதல் செய்ய உள்ளதாக தெரிவித்தார்.

Also Read:   இப்படியுமா கொள்ளையடிப்பாங்க?.. எஸ்.பி.ஐ ஏ.டி.எம் கொள்ளையர்களின் பிளான்.. வெளியான புதிய தகவல்கள்..

3, 325 கோடி செலவு செய்ய உள்ளதாகவும், தமிழகத்திற்கு எப்போதும் 3 லட்சத்து 6 ஆயிரம் டன் வழங்கி வருவதாகவும், தற்போது பிரதமர் யோஜனா மூலம் 1 லட்சத்து 78 ஆயிரம் டன் கூடுதலாக வழங்குவதாக கூறினார்.  தமிழகத்தில் இந்த வருடம் 45 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய உள்ளதாகவும், இதன்மூலம் 30 லட்சம் டன் அரிசி கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றார்.

உற்பத்தி செய்த அரிசி  அனைத்தும் தரமானவை என்று கூறிய அவர், தமிழக அரசு கொள்முதல் செய்த அரிசிகளை முழுமையாக ஆய்வு செய்த பின்னரே ரேஷன் கடைகளுக்கு அனுப்பியதாக தெரிவித்தார்.  ஆந்திரா, மற்றும் தெலுங்கானாவில் தான் அதிகளவு உற்பத்தி நடைபெறுவதாகவும், மற்ற மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்து வந்தாலும், அதன்மூலம் 0.12 சதவீதம் அளவிற்கே இழப்பு ஏற்படுவதாக கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

குறிப்பாக, யாருமே பசியால் தவிக்க கூடாது என்பதற்காக அதிகமாக இலவச அரிசியை மத்திய அரசு அளித்துள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் தரமான அரிசிகள் கிடைப்பதற்கு மாநில அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிய அவர், மத்திய அரசு வழங்கும் போது தரமான பொருட்களையே வழங்குவதாகவும், இதில் மத்திய அரசின் தலையீடு இதில் ஒருபோதும் இருக்காது என்று தெரிவித்தார்.
இந்த மே, ஜூன் மாதங்களில் மட்டும் 3 லட்சத்து 66 ஆயிரம் கொள்முதல் செய்துள்ளதாக தெரிவித்தார்.
Published by:Arun
First published: