வேலூர் அரசு மருத்துவமனையில் 5 பேர் உயிரிழப்பு.. ஆக்சிஜன் பற்றாக்குறை என்ற உறவினர்களின் குற்றச்சாட்டுக்கு மாவட்ட நிர்வாகம் மறுப்பு

வேலூர் அரசு மருத்துவமனையில் 5 பேர் உயிரிழப்பு.. ஆக்சிஜன் பற்றாக்குறை என்ற உறவினர்களின் குற்றச்சாட்டுக்கு மாவட்ட நிர்வாகம் மறுப்பு

வேலூர் மருத்துவமனை

உயிரிழந்த மூவரில் இருவர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு விட்டதாக சுகாதாரத்துறையினர் கூறியுள்ளனர்.

 • Share this:
  வேலூர் அரசு மருத்துவமனையில் மூன்று நோயாளிகள் உயிரிழந்ததற்கு ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமல்ல என மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் விளக்கமளித்துள்ளார்.

  வேலூர் மாவட்டத்தில் உள்ள அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த ராஜேஸ்வரி, செல்வராஜ் மற்றும் சிராஜ் என்ற
  மூன்று நோயாளிகள் உயிரிழந்தனர். மூவரின் உயிரிழப்புக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை தான் காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில், அவர்களின் மரணத்திற்கு ஆக்சிஜன் பற்றக்குறை காரணமல்ல என மருத்துவமனை நிர்வாகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் விளக்கமளித்துள்ளனர். வேலூர் மருத்துவமனையில் போதிய அளவு ஆக்சிஜன் சிலிண்டர்கள் இருப்பு உள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

  அதேபோல், உயிரிழந்த மூவரில் இருவர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு விட்டதாகவும், கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறும் அறைக்கு அருகே வேறு ஒரு ஆக்சிஜன் குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

  இதனிடையே, மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த உயிரிழந்தவர்களின் உறவினர்கள், ஆக்சிஜன் பற்றாக்குறையால் தான் உயிரிழப்பு நிகழ்ந்ததாக குற்றம்சாட்டினர்
  Published by:Ramprasath H
  First published: