Home /News /tamil-nadu /

திலகர் காட்டம், கிருஷ்ணா விலாஸ்.. சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்காக இருந்த சென்னையின் 5 இடங்கள்

திலகர் காட்டம், கிருஷ்ணா விலாஸ்.. சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்காக இருந்த சென்னையின் 5 இடங்கள்

தேசிய கொடி

தேசிய கொடி

சென்னை, சுதந்தர போராட்டத்தில் பல முக்கிய நினைவுகளுக்கும், தலைவர்களுக்கும் புகலிடமாக இருக்கிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
  இந்தியாவிற்கு ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகள் ஆன நிலையில் இந்த ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் அதைக் கோலாகலமாக நாம் அனைவரும் இணைந்து கொண்டாட உள்ளோம். இந்த நிலையில் நாம் தினமும் கடந்து போகின்ற ஒரு இடம் சுதந்தர போராட்டத்தில் ஒரு பங்காக இருந்தது என்பது உங்களுக்குத் தெரியுமா? தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் இந்தியச் சுதந்தர போராட்டத்தில் ஒரு பங்காக இடம்பெற்ற 5 முக்கிய இடங்கள் இருக்கின்றன. சென்னையில் நினைவாக இருக்கும் முக்கிய 5 இடங்களைப் பற்றிப் பார்ப்போம்.

  1. C. ராஜகோபாலாச்சாரியின் இல்லம்

  சென்னை மெட்ராஸ் ஆக இருந்த போது எண்:2, கதீட்ரல் சாலையில் இந்தியச் சுதந்தர போராளியும் தமிழ்நாடு அரசியலில் பெரும் பங்கு வகித்த c. ராஜகோபாலாச்சாரியின் இல்லம் இருந்தது. தற்போது அது வெல்கம் ஹோட்டலாக மாறியுள்ளது. c. ராஜகோபாலாச்சாரி இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரல் மற்றும் மெட்ராஸ் மாகாணத்தின் முதலமைச்சராக இருந்தவர். மேலும் இவரே கவர்னர் ஜெனரலாக பதவி வகித்த முதல் இந்தியர் ஆவர்.

  திலகர் பவன்


  இவரின் இல்லம் மெட்ராஸ்யில் இருந்த நிலையில் காந்தி மெட்ராஸ்க்கு வருகை தந்த போது C. ராஜகோபாலாச்சாரியை முதன் முதலில் அவரது இல்லத்தில் சந்தித்தார். மேலும் காந்தி ராஜகோபாலாச்சாரி இல்லத்தில் தங்கினார். அந்த நினைவு பொறிக்கப்பட்டு தற்போதும் அங்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த இடமே 1919யில் தேசிய அளவில் தொடங்கப்பட்ட ஒத்துழையாமை இயக்கத்திற்குப் பிறப்பிடமாக அமைந்தது.

  நினைவுப் பலகை


  2. கிருஷ்ணா விலாஸ், மயிலாப்பூர்

  தற்போது ராமகிருஷ்ண மட சாலையில் அமைத்திருக்கும் விஸ்வகமல் அடுக்கு மாடி குடியிருப்பு மெட்ராஸியின் கிருஷ்ணா விலாஸ் என்று இருந்தது. இங்கே இந்தியாவின் சுதந்திரம் மற்றும் அரசியலுக்கான மிக முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. ஆம் இந்தியத் தேசிய காங்கிரஸ் பிறந்த இடம் இதுவே. 1884இல் கொல்கத்தாவில் A.O.ஹியூம் இந்தியரால் அரசியல் கட்சி தொடங்க எண்ணி மெட்ராஸில் 17 தலைவர்களை அழைத்து ஆலோசித்த இடம் கிருஷ்ணா விலாஸ். இந்திய அரசியலுக்கு மூலாதாரமாக வித்திட்ட கூட்டம் இங்கு நடைபெற்று அடுத்த வருடம் கட்சி தொடங்கப்பட்டது.

  கிருஷ்ணா விலாஸ்


  3. திலகர் காட்டம் - மெரினா கடற்கரை

  மெரினா கடற்கரை இந்தியச் சுதந்தர போராட்டத்தில் பெரும் பங்கு வகித்த இடம். கடற்கரையில் திலகர் காட்டம் என்ற ஒரு பகுதி இருந்தது. அங்கு தான் சுதந்தர போராட்டத்தில் பெரும் உரையாற்றல் நடைபெறும். அப்படி மெரினா கடற்கரையில் நடந்த பொதுக்கூட்டங்களில் காந்தி, சுபாஷ் சந்திரபோஸ், பாலகங்காதர திலகர், அன்னி பெசன்ட், வி.ஓ. சிதம்பரம் பிள்ளை, காமராஜ் போன்ற பெரிய தலைவர்கள் உரையாற்றியுள்ளார். உலகளவில் 2வது பெரிய கடற்கரை என்று அழைக்கப்படும் மெரினா கடற்கரை சுதந்தர போராட்டத்தில் ஒரு முக்கிய இடமாக இருந்துள்ளது.

  மெரினா கடற்கரை


  4. இந்தி பிரச்சார சபை, தி நகர்

  இந்தி பிரச்சார சபை 1818இல் காந்தியால் தொடங்கப்பட்டது. இது ஹிந்தி மொழியைக் கற்பிக்கும் இடம். மெட்ராஸில் தற்போது தி.நகர்ப் பகுதியில் தொடங்கப்பட்ட தென் இந்திய இந்தி பிரச்சார சபைக்கு 1936இல் காந்தி வருகை தந்து இருந்தார். காந்தியின் உரையாற்றலையும் அவர் பாடலையும் கேட்க பெரும் கூட்டமே அங்குக் கூடி இருந்தது. அப்போது நடந்த பிரார்த்தனை கூட்டத்தில் கலந்துகொண்ட காந்தி ரகுபதி ராகவ ராஜராம் மற்றும் வைஷ்ணவ ஜன ஆகிய பாடல்களைப் பாடினார்.

  இந்தி பிரச்சார சபை


  5. தி க்ரோவ், எல்டாம்ஸ் சாலை, மயிலாப்பூர்

  தற்போது க்ரோவ் பள்ளியாக இயங்கிக் கொண்டு இருக்கும் இது C.P. ராமசாமி ஐயரின் வீடாக இருந்தது. இந்த பெயர் வரக் காரணம் அங்கு வளர்ந்து நிற்கும் பெரிய மரங்கள் தான். C.P. ராமசாமி ஐயர், வழக்கறிஞரும் மெட்ராஸ் மாகாணத்தின் தலைமை வழக்கறிஞராக இருந்தவர்.

  தி க்ரோவ் பள்ளி


  இங்குள்ள மரத்தின் அடியில் அமர்ந்து தான் C.P. ராமசாமி ஐயரும் அண்ணி பெசன்ட் அம்மையாரும் புதிய இந்திய இதழுக்கான பதிவின் திருத்தங்களைச் செய்தனர். அப்போது ஆங்கிலேய அரசு தேசியவாத செயல்களுக்குத் தடை விதித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Janvi
  First published:

  Tags: Independence day

  அடுத்த செய்தி