ஒரு வாரத்தில் 5 முக்கிய அதிகாரிகள் பணியிட மாற்றம்.. 7 போலீசார் பணியிடை நீக்கம்.. திருச்சியில் தேர்தல் நடக்குமா...?

திருச்சி மாநகர காவல் நிலையம்

மாநகர காவல் உதவி ஆணையர், ஆய்வாளர், உதவி ஆய்வாளர், தலைமைக் காவலர், நுண்ணறிவுப் காவலர்கள் என 7 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Share this:
கடந்த 23ம் தேதி பெட்டவாய்த்தலையில் முசிறி எம்.எல்.ஏ  மற்றும் அதிமுக வேட்பாளர் செல்வாராஜ் காரில்  ரூ. 1 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதற்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்று காரில் இருந்த அதிமுக பிரமுகரும் மாவட்ட கவுன்சிலர் உள்ளிட்ட 4 பேரும் தெரிவித்தனர். இதற்கு பிறகு நடவடிக்கை  எடுக்கப்படவில்லை. இந்த விவகாரத்தை சரியாக கையாளவில்லை என்கிற குற்றச்சாட்டில் மாவட்ட ஆட்சியர் சிவராசு, எஸ்.பி ராஜன், துணை ஆட்சியர் நிசாந்த்  கிருஷ்ணா ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு  பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து கடந்த 27ம் தேதி திருச்சி மாநகரில் திருச்சி மேற்கு தொகுதிக்கு உட்பட்ட  போலீசார் பணம் பட்டுவாடா விவகாரத்தில் 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். திமுக வழக்குரைஞர் மணிவண்ண பாரதி உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை மாநகர குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்திய நிலையில், பின்னர் சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டது.

எஸ்.பி ராஜன்,


இந்நிலையில்,காவல் நிலையங்களில் பணப்பட்டுவாடா குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று தேர்தல் ஆணைய பரிந்துரையின் அடிப்படையில்,  மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தேர்தல் அல்லாத பதவிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பணியில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக திருச்சி மாநகரம் பொன்மலை உதவி ஆணையர் தமிழ்மாறன்  பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

லோகநாதன்


தேர்தல் பிரச்சாரம் இறுதி கட்டத்தை எட்டி வரும் நிலையில், திருச்சி மாவட்டம் மற்றும் மாநகரில்  ஒரு வாரத்தில்  முக்கிய அதிகாரிகள் 5 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதில் மாநகர காவல் உதவி ஆணையர், ஆய்வாளர், உதவி ஆய்வாளர், தலைமைக் காவலர், நுண்ணறிவுப் காவலர்கள் என 7 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க...  பெரம்பலூரில் செல்போனுக்காக 10 வயது சிறுவனை ஆற்றுத் தண்ணீரில் மூழ்கடித்து கொன்றது அம்பலம்...

மேலும், போலீசாருக்கு பணப்பட்டுவாடா வழக்கை சிபிசிஐடி விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இவைமட்டுமின்றி, கடந்த 29ம் தேதி  மணப்பாறை எம்.எல்.ஏ, அதிமுக வேட்பாளர் சந்திரசேகர் நிறுவன  ஓட்டுநர் வீட்டில் ரூ. 1 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்தும் தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

தமிழ் மாறன் : இவர் அண்மையில் அண்ணா பதக்கம் பெற்றார்.


இப்படி, முசிறி, திருச்சி மேற்கு, மணப்பாறை  என வேட்பாளர்களைத் தொடர்புப் படுத்தி ரொக்கப் பணம் பறிமுதல், காவல் நிலைய பணப் பட்டுவாடா என தொடர் குற்றச்சாட்டுகளால், அதிகாரிகள் மீது தொடரும் நடவடிக்கை உள்ளிட்டவற்றால்,கடந்த 2016ம் ஆண்டு அரவக்குறிச்சி, தஞ்சாவூர், ஆர்.கே.நகர் தொகுதிகளைப் போல் திருச்சி மேற்கு, முசிறி, மணப்பாறை தொகுதிகளிலும் தேர்தல் ஒத்தி வைக்கப்படுமா? அல்லது யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து திட்டமிட்டபடி தேர்தல் நடக்குமா...? என்பது விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க...  பெரம்பலூரில் செல்போனுக்காக 10 வயது சிறுவனை ஆற்றுத் தண்ணீரில் மூழ்கடித்து கொன்றது அம்பலம்...உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: