தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம்
கோப்புப் படம்
  • Share this:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 6 விழுக்காடு அதிகமாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.

அடுத்த 48 மணி நேரத்தைப் பொறுத்தவரை கடலோர மாவட்டங்களை ஒட்டியுள்ள உள்மாவட்டங்களில் லேசான மழைக்கும், கடலூர் , நாகை, திருவாரூர், தஞ்சை புதுக்கோட்டை மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாகவும் கூறினார்.


சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் அக்டோபர் முதல் இன்று வரை இயல்பை விட 6 சதவிகிதம் அதிகமாக வடகிழக்குப் பருவமழை பெய்துள்ளது.
First published: December 13, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்