திருச்சி, சேலம் உள்ளிட்ட 5 மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம்

தலைமைச் செயலகம்

மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட 5 மாவட்ட ஆட்சியர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

 • Share this:
  இதுதொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள உத்தரவில், மதுரை ஆட்சியராக உள்ள அன்பழகனுக்குப் பதிலாக, மாநில தொழில் ஊக்குவிப்பு கழகத்தின் செயல் இயக்குநர் அனீஷ் சேகர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  சேலம் ஆட்சியர் பொறுப்பிலிருந்து எஸ்.ஏ.ராமன் நீக்கப்பட்டு, சமூக நலத் துறையின் இணைச் செயலாளர் கார்மேகம் நியமிக்கப்பட்டுள்ளார்.

  கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திர சேகர் சகாமுரிக்குப் பதிலாக தமிழ்நாடு மாநில ஆணையத்தின் செயலாளர் பாலசுப்பிரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார்.

  திருச்சி மாவட்ட ஆட்சியராக தொழில் மற்றும் வணிகத் துறை கூடுதல் ஆணையர் சிவராசு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

  Must Read : இந்தியாவில் குறையத் தொடங்கிய கொரோனா : தினசரி பாதிப்பு நேற்று 3 லட்சத்துக்கும் குறைவு- 4,106 பேர் இறப்பு

   

  திருச்சி மாவட்ட ஆட்சியராக இருந்த திவ்யதர்ஷினியை, தர்மபுரி ஆட்சியராக நியமித்து தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
  Published by:Suresh V
  First published: