• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • குழந்தை மித்ராவை காப்பாற்ற மேலும் 5 கோடி தேவை.. நிதியுதவி வழங்க முதல்வருக்கு தந்தை வேண்டுகோள்..

குழந்தை மித்ராவை காப்பாற்ற மேலும் 5 கோடி தேவை.. நிதியுதவி வழங்க முதல்வருக்கு தந்தை வேண்டுகோள்..

மித்ரா

மித்ரா

அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமியின் சிகிச்சைக்கு உதவும்படி முதல்வர் ஸ்டாலினுக்கு குழந்தையின் தந்தை கடிதம்.

  • Share this:
அரிய வகை மரபணு நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தை மித்ரா நாளை இரண்டு வயது அடைகிறாள். அவளது உயிரை காப்பாற்ற 16 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்தை இரண்டு வயதுக்குள் வழங்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நாளை குழந்தை மித்ராவுக்கு இரண்டு வயதாகும் நிலையில் இது வரை க்ரவுட் சோர்சிங் மூலமாக 11 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு தன் குழந்தையை காப்பாற்ற நிதியுதவி வழங்க வேண்டும் என்று குழந்தையின் தந்தை தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் குமாரப்பாளையத்தை சேர்ந்த சதீஷ்குமார், பிரியதர்ஷினி தம்பதியினரின் முதல் குழந்தை மித்ராவாகும். சதீஷ்குமார் நாமக்கல்லில் ஆடை வியாபாரம் செய்து வருகிறார். தந்தை சதீஷ்குமார் “இரண்டு வயதுக்குள் மருந்தை கொடுக்க வேண்டும் என்று அமெரிக்க FDA விதிகள் கூறுகின்றன. இருந்தபோதிலும் எவ்வளவு சீக்கிரம் கிடைக்கிறதோ அவ்வளவு சீக்கிரம் மருந்தை கொடுத்தால் நல்லது என இங்குள்ள மருத்துவர்கள் தெர்விக்கின்றனர்.

மருந்து கிடைத்தால் பெங்களூரூவில் உள்ள மருத்துவமனையில் ஊசி செலுத்துவோம். முதல்வரின் தனிப்பிரிவுக்கும் சுகாதாரத்துறை அமைச்சருக்கும் கோரிக்கை வைத்துள்ளோம். 10.89 கோடி ஞாயிற்றுகிழமை வரை கிடைத்திருந்தது. எனினும் மேலும் 5 கோடி தேவைப்படுகிறது. குழந்தை இரண்டு வயதை கடக்கப் போகிறாள் என்பதால் தேவையான நிதி விரைவில் கிடைக்க முதல்வர் உதவி செய்தால் எங்கள் குழந்தை உயிர் பிழைக்கும் ” என்றார்.

குழந்தையின் பெற்றோர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் நிதி திரட்டும் பிரச்சாரத்துக்கு திரைத்துறை, சின்னத்திரை, விளையாட்டுத்துறை பிரபலங்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இயக்குநர்கள் கவுதம் வாசுதேவ் மேனன், லோகேஷ் கனகராஜ், மண்டேலா பட இயக்குநர் மடோன் அஷ்வின் உள்ளிட்டோர் இந்த பிரச்சாரத்துக்கு டிவிட்டரில் ஆதரவு தெரிவித்துள்ளனர். நடிகர் சத்யராஜ், பாடகர்கள் சுஜாதா, சீனிவாஸ், நடிகர்கள் பிரசன்னா, சிபிராஜ்,  இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் உள்ளிட்டோர் இன்ஸ்கிராமில் வீடியோக்கள் பதிவிட்டுள்ளனர்.

மித்ரா


SMA எனப்படும் முதுகு தண்டுவட நார் சிதைவு நோய் பிறவியிலேயே குழந்தைகளுக்கு ஏற்படுவதாகும். இதனால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு தசைகள் பலவீனமாக இருக்கும். இதனால் நடப்பது ஓடுவது போன்ற இயல்பான செயல்களை கூட குழந்தைகளால் செய்ய முடியாது. நாளடைவில் அது உயிரை கொல்லும்.
இந்த கொடிய நோய்க்கு இந்தியாவில் மருந்து இல்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் படிக்க... தமிழ்நாட்டில் 500 எம்பிபிஎஸ் இடங்கள் வன்னியர்களுக்கு ஒதுக்கப்படலாம்...

சுவிட்சர்லாந்தை சேர்ந்த நோவார்டிஸ் நிறுவனம் தயாரிக்கும் zolgensma எனும் மருந்து மட்டுமே தற்போது உலகில் இந்நோக்கு கிடைக்கும் ஒரே மருந்தாகும். அதனை ஒரு முறை செலுத்தினால் நல்ல பலன் கிடைப்பதாக கூறப்படுகிறது. அதன் விலை ரூ.16 கோடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: