ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஜனவரி 1 முதல் ஆர்டிபிசிஆர் சோதனை கட்டாயம் - மத்திய அரசு உத்தரவு

ஜனவரி 1 முதல் ஆர்டிபிசிஆர் சோதனை கட்டாயம் - மத்திய அரசு உத்தரவு

மாதிரி படம்

மாதிரி படம்

5 நாடுகளில் இருந்து வருவோர் கட்டாயம் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவு

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வெளிநாட்டு விமான பயணிகளுக்கு வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் ஆர்டி-பிசிஆர் சோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சீனாவில் தற்போது கொரோனா BF7 வகை வைரஸ் அதி தீவிரமாக பரவி வருகிறது. இதனால் இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து வெளிநாட்டு பயணிகளை தீவிரமாக மத்திய மாநில அரசுகள் கண்காணித்து வருகிறது.

இந்த நிலையில் சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு ஆர்டி-பிசிஆர் சோதனை வரும் விமான பயணிகளுக்கு ஜனவரி 1 முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சீனா,தாய்லாந்து,தென் கொரியா உள்ளிட்ட 5 நாடுகளில் இருந்து வருவோர் கட்டாயம் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

First published:

Tags: CoronaVirus, COVID-19 Test