திமுகவில் 49 முதல்முறை வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்

திமுகவில் 49 முதல்முறை வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்

அண்ணா அறிவாலயம்

முதல்வர் பழனிச்சாமி போட்டியிடும் எடப்பாடித் தொகுதியில், கழகத்தின் சாதாரண தொண்டரான ஆர்.சம்பத் குமார் என்ற இளைஞர் போட்டியாளராக களம் இறக்கப்பட்டுள்ளார்.

 • Share this:
  2021 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டார். இந்த வேட்பாளர் பட்டியலில் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

  வழக்கமாக வேட்பாளர் பட்டியலில் வேட்பாளரின் பெயருக்கு அருகில் கழகத்தில் அவர் வகித்து வரும் பதவி குறிக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்த முறை வேட்பாளரின் கல்வித்தகுதி குறிக்கப்பட்டிருந்தது. இந்த வேட்பாளர் பட்டியலில் இதுவரை சட்டமன்ற / நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாத பல்வேறு புதிய நபர்களுக்கு முதல் முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 173 தொகுதிகளில் 49 பேர் முதல் முறையாக வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளனர்.

  முதல்வர் பழனிச்சாமி போட்டியிடும் எடப்பாடித் தொகுதியில், கழகத்தின் சாதாரண தொண்டரான ஆர்.சம்பத் குமார் என்ற இளைஞர் போட்டியாளராக களம் இறக்கப்பட்டுள்ளார். அமைச்சர் ஜெயகுமாருக்கு எதிராக அதே பகுதியைச் சேர்ந்த ஐடீரீம் மூர்த்தி, ஆயிரம் விளக்கு தொகுதியில் மருத்துவர் மற்றும் சமூக செயற்பாட்டாளர் ஏழிலன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் எஸ்.பி., வேலுமணிக்கு எதிராக ஜல்லிக்கட்டு போராட்டத்தில் முன்னிலை வகித்த கார்த்திகேய சிவசேனாபதி ஆகிய புது முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

  Must Read :  திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு : கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் போட்டி... 13 பெண்களுக்கு வாய்ப்பு

   

  இந்த பட்டியலில் 9 மருத்துவர்களும், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளில் 6 முனைவர் பட்டம் பெற்றவர்களும், 32 வழக்கறிஞர்களும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வேட்பாளர் பட்டியலில் கழகத்தின் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி வரும் நபர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது, மேலும் அனைத்து சமூக மக்களையும் பிரதிநிதித்துவம் படுத்தும் வகையில் அனைத்து சமூகங்களுக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
  Published by:Suresh V
  First published: