• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கோவில் யானைகள் நலவாழ்வு முகாம் தொடங்கியது

கோவில் யானைகள் நலவாழ்வு முகாம் தொடங்கியது

யானைகள் நலவாழ்வு முகாம்

யானைகள் நலவாழ்வு முகாம்

கோவையில் நடைபெறும் யானைகள் முகாம் இன்று தொடங்கி வரும் ஜனவரி 30-ம் தேதி வரை மொத்தம் 48 நாட்களுக்கு நடக்கும். இந்த முகாமில் மொத்தம் 28 யானைகள் பங்கேற்க இருக்கின்றன.

  • News18
  • Last Updated :
  • Share this:
கோவை மாவட்டம் தேக்கம்பட்டியில் கோவில் யானைகளுக்கான நலவாழ்வு முகாமை அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், சேவூர் ராமசந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த முகாமுக்கு எதிர்ப்பு தெரிவித்து சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அயராத அலுவல்களுக்கு நடுவே ஓய்வு தேவைப்படும் போது நண்பர்கள் எல்லோரும் ஒன்றாக வெளியூர் சென்றால் அங்கு மகிழ்ச்சிக்கும் கொண்டாட்டத்துக்கும் பஞ்சமே இருப்பதில்லை. நிலத்தின் மிகப்பெரிய பாலூட்டியான யானைகளும் இதற்கு விதிவிலக்கல்ல.

மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் பவானி ஆற்றங்கரையை ஒட்டி கோவில் மற்றும் மடங்களில் உள்ள யானைகளுக்கான 11-வது நலவாழ்வு முகாமை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்தார். அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சேவூர் ராமசந்திரன், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உடனிருந்தனர்.

யானைகளுக்கு கரும்பு, வெல்லம், பழங்கள் உள்ளிட்டவற்றை அவர்கள் கொடுத்து மகிழ்ந்தனர். இந்த முகாமுக்கு அரசு சார்பில் ஒரு கோடியே 48 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் காலையிலும் மாலையிலும் நடைப்பயிற்சி, உடல் எடை பரிசோதனை, மூலிகை உணவுகள், ஷவர் பாத் என யானைகளுக்காக பல சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முகாமில் யானைகள்


இன்று தொடங்கி வரும் ஜனவரி 30-ம் தேதி வரை மொத்தம் 48 நாட்களுக்கு நடக்கும் இந்த முகாமில் மொத்தம் 28 யானைகள் பங்கேற்க இருக்கின்றன. மொத்தம் 6 ஏக்கர் பரப்பில் இந்த முகாம் அமைக்கப்பட்டுள்ளது. காட்டு யானைகள் முகாமுக்குள் நுழையாமல் இருக்க மின்வேலிகள் வைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே, யானைகள் நலவாழ்வு முகாமுக்கு எதிர்ப்பு தெரிவித்து 33 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். முகாம் நடத்துவதால் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து சேதங்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டினர். போராட்டத்தில் ஈடுபட்ட 30-க்கும் மேற்பட்டோரைத் தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர் .

தேக்கம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் சில வீடுகளில் கறுப்புக்கொடி கட்டியும் யானைகள் நலவாழ்வு முகாமுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Also see...ராஜஸ்தானின் புதிய முதலமைச்சர் அசோக் கெலாட்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: