விராலிமலை அருகே வாந்தி வயிற்றுப்போக்கு: 40க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

சிகிச்சை பெறுபவர்கள்

சிகிச்சை பெற்று வருபவர்கள் சில நாட்களில் வீடு திரும்புவார்கள் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்,

  • Share this:
    விராலிமலை அருகே வாந்தி வயிற்றுப்போக்கு தலை சுற்றுதல் போன்ற காரணங்களால் திருநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட கலர் பட்டி, ஆச்சநாயக்கன்பட்டி, மேலகலம் பகுதிகளைச் சேர்ந்த சிறுவர், சிறுமி உட்பட46 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட திருநல்லூர் ஊராட்சியில் இருந்து  விராலிமலை அருகே குன்னத்தூரில் காவிரி வைகை குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு வருகை தந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரவேற்பதற்காக திருநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட கலர் பட்டி நாயக்கன்பட்டி மேளகளம் உள்ளிட்ட கிராமங்களிலிருந்து வேன் மூலமாக பொது மக்களை அழைத்துக் கொண்டுபோய் முதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின்பு வீடு திரும்பினர்.

    இவர்களுக்கு எலுமிச்சை சாதம், புளி சாதம், முட்டையுடன் கூடிய ஒரு பாட்டில் குடிநீர் இவைகள் அடங்கிய துணிப்பையை விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் வழங்கப்படடது. இவைகளை வாங்கி சென்று மாலை அவரவர் வீடுகளில் உணவு உண்டு, இரவு தூக்கியுள்ளனர் . இந்நிலையில், அப்பகுதிகளில் இந்த உணவை உண்ட ஒரு சிறுமி ஒரு சிறுவன் 34 பெண்கள் 4 ஆண்கள் என இவர்கள் அனைவரும்  வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்பட்டது. இதனால், அவர்களின் உறவினர்கள் பாதிக்கப்பட்டவர்களை திருநல்லூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இவர்கள் உண்ட உணவில் ஏதோ கலந்து இருப்பதாக கூறி இவர்கள் அனைவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கே அவர்களை, பரிசோதித்த மருத்துவர் அனைவருக்கும் ரத்த பரிசோதனை, சர்க்கரையின் அளவு உள்ளிட்டவற்றை பரிசோதனை செய்து, அனைவருக்கும் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர்கள், சில நாட்களில் வீடு திரும்புவார்கள் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    இது குறித்து திமுக மாவட்ட இலக்கிய அணி செயலாளர் திருநல்லூர் பழனியப்பன், இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களிடம் ஆறுதல் கூறினார். பின்னர், ‘விரைவில் அவர்கள் குணமடைந்து வீடு திரும்ப, மருத்துவர்களிடம் அறிவுறுத்தியுள்ளோம்’ என்று கூறி சென்றார்.

    அதன்பின்பு புதுக்கோட்டை மாவட்ட கூட்டுறவு வங்கி பெருந்தலைவர் இரா சின்னத்தம்பி அவர்கள் மருத்துவமனைக்கு வருகை தந்தார். அவர், சிகிச்சை பெற்று வருபவர்களிடம், ‘நான் உங்களை நன்றாக பார்த்துக் கொள்கிறேன் நீங்கள் கவலைப்பட வேண்டாம்’ என்று கூறினார்.

    Must Read : 11-வது முறையாக நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார் ஓ.பன்னீர்செல்வம்!

     

    இந்த சம்பவம் குறித்து இலுப்பூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    Published by:Suresh V
    First published: