Home /News /tamil-nadu /

சென்னையில் நடைபெற்று வரும் 45-வது புத்தக கண்காட்சி இன்றுடன் நிறைவடைகிறது...

சென்னையில் நடைபெற்று வரும் 45-வது புத்தக கண்காட்சி இன்றுடன் நிறைவடைகிறது...

மொத்தம் 18 நாட்களாக காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை புத்தக காட்சி நடைபெற்றது. இதில் 12 லட்சத்திற்கும் அதிகமான வாசகர்கள் வந்துள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    சென்னையில் நடைபெற்று வரும் 45-வது புத்தக காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது. இன்று ஞாயிற்றுக் கிழமை என்பதாலும், கடைசி நாள் என்பதாலும் புத்தக காட்சிக்கான மக்கள் வரத்து அதிகம் காணப்படுகிறது.

    தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பாக ஆண்டுதோறும் புத்தக கண்காட்சி வெகுவிமர்சையாக நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான புத்தக காட்சியை கடந்த பிப்ரவரி மாதம் 16-ம்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    புத்தக காட்சி தொடங்கப்பட்ட நாள் முதல், அரங்கிற்கு வரும் மக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வந்தது. சுமார் 800 அரங்குகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. வாங்கும் ஒவ்வொரு புத்தகத்திற்கும் குறைந்தபட்சம் 10 சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இதையும் படிங்க - ஆவின் பொருட்கள் விலை உயர்வுக்கு என்ன காரணம்? அதிகாரிகள் விளக்கம்

    இன்றுடன் மொத்தம் 18 நாட்களாக காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை புத்தக காட்சி நடைபெற்று வருகிறது. இதில் 12 லட்சத்திற்கும் அதிகமான வாசகர்கள் வந்துள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    இதையும் படிங்க - உழவர் விருதுகள் 2022: மகன்கள் சூர்யா, கார்த்தி முன்னிலையில் மேடையில் தேம்பி அழுத சிவகுமார்

    புத்தக காட்சியில் நாள்தோறும் அறிஞர்கள் பங்கேற்ற நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. சனி, ஞாயிறு கிழமைகளில் வாசகர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால், நந்தனம் சிக்னல் பகுதியில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. இந்நிலையில் இன்றுடன் புத்தக காட்சி நிறைவடைகிறது. ஆசியாவிலேயே மிகப்பெரிய புத்தக காட்சியாக சென்னை புத்தக காட்சி கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.
    Published by:Musthak
    First published:

    Tags: Chennai book fair

    அடுத்த செய்தி