தீபாவளியை முன்னிட்டு ரூ.455 கோடிக்கு மது விற்பனை...!

இன்றும் விடுமுறை தினம் என்பதால் இன்று 150 கோடி வரை மது விற்பனை நடக்க வாய்ப்பு உள்ளதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றது.

தீபாவளியை முன்னிட்டு ரூ.455 கோடிக்கு மது விற்பனை...!
டாஸ்மாக் (கோப்புப் படம்)
  • News18
  • Last Updated: October 28, 2019, 4:09 PM IST
  • Share this:
தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவமும் மூன்று நாட்களில் டாஸ்மாக் கடைகளில் 455 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது.

தீபாவளியை முன்னிட்டு 360 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டதாக தகவல்கள் பரவியது. அதனை மறுக்கும் வகையில்  மின்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் தங்கமணி,  மதுவிற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வதந்தி பரவுவதாக கூறினார்.

இதனை பொதுமக்கள் நம்ப வேண்டாமென கேட்டுக் கொண்ட அவர், மதுவிற்பனைக்கு எந்த ஆண்டும் இலக்கு நிர்ணயித்தது இல்லை என்றும் தெரிவித்திருந்தார்.


இந்நிலையில், தீபாவளி தினமான நேற்று ரூ. 172 கோடிக்கும், தீபாவளி பண்டிகைக்கு முதல்நாள் ரூ. 183 கோடிக்கும் , வெள்ளிக்கிழமை ரூ.100 கோடி என மூன்று நாட்களில் ரூ.455 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து இன்றும் விடுமுறை தினம் என்பதால் இன்று 150 கோடி வரை மது விற்பனை நடக்க வாய்ப்பு உள்ளதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றது.

Also see...
First published: October 28, 2019, 4:09 PM IST
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading