புதியதாக உருவாக்கப்பட்டுள்ள 4 மாவட்டங்களில் ஆட்சியர் அலுவலகங்கள் கட்ட 452 கோடி ரூபாய் ஒதுக்கீடு

தமிழகத்தில் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள 4 மாவட்டங்களில் ஆட்சியர் அலுவலகங்கள் கட்டுவதற்கு 452 கோடி ரூபாய் ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

புதியதாக உருவாக்கப்பட்டுள்ள 4 மாவட்டங்களில் ஆட்சியர் அலுவலகங்கள் கட்ட 452 கோடி ரூபாய் ஒதுக்கீடு
தமிழக அரசு தலைமைச் செயலகம்
  • Share this:
தமிழகத்தில் 32 மாவட்டங்கள் இருந்த நிலையில் கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தென்காசி, மயிலாடுதுறை ஆகிய 6 மாவட்டங்கள் புதியதாக உருவாக்கப்பட்டன.

இதில் கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு இதர அரசு அலுவலகங்களுடன் கூடிய மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் கட்டுவதற்காக 452 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Also see:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலம் அமைக்க 104 கோடியே 44 லட்சம் ரூபாய், செங்கல்பட்டு மாவட்டத்திற்கு 119 கோடியே 21 லட்சம் ரூபாய், திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகம் கட்டும் பணிக்கு 109 கோடியே 71 லட்சம் ரூபாய், ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு 118 கோடியே 40 லட்சம் ரூபாய் என மொத்தம் 452 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கி அரசாணை பிறப்பித்துள்ளது.
First published: July 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading