மாமல்லபுரத்தில் நடைபெறும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஒலிம்பிக் ஜோதியை நாளை மறுநாள் 19ஆம் தேதி டெல்லி இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் பிரதமர்
மோடி ஏற்றி வைக்கிறார். இந்த ஜோதி இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பயணித்து ஜூலை 28ம் தேதி
சென்னை வந்தடைகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் கீழாத்தூரில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை இன்று திறந்து வைத்த தமிழக சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகின்ற ஜூலை 28ம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளதை முன்னிட்டு நாளை மறுநாள் 19ம் தேதி டெல்லியில் உள்ள இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் இந்திய பிரதமர் ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி தொடங்கி வைக்க உள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அந்த ஜோதி இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 75 பெரும் நகரங்களுக்கு சென்று பின் வருகின்ற ஜூலை 28ம் தேதி தமிழகம் கொண்டு வரப்பட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் கையில் ஒப்படைக்கப்பட்டு போட்டி தொடங்கி வைக்கப்பட உள்ளது.
இதுவரை இல்லாத வகையில் இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தான் 188 நாடுகள் பங்கேற்பதற்காக பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு தேவையான வசதிகள், மற்றும் போட்டியை நடத்துவதற்கான அனைத்து வகையான முன்னேற்பாடு பணிகளை 50 சதவீதம் நிறைவடைந்துள்ளது.
ஜூலை 15-ஆம் தேதிக்குள் அனைத்து பணிகளும் முழுமையாக நிறைவடைந்துவிடும் என்றும் அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.
செய்தியாளர் - ர.ரியாஸ்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.