Home /News /tamil-nadu /

2நாள் பயணமாக தமிழகம் வரும் பிரதமர் மோடி

2நாள் பயணமாக தமிழகம் வரும் பிரதமர் மோடி

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

Chess Olympiad 2022 : செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 28-ம் தேதி சென்னை வருகிறார்.

    2 நாள் பயணமாக நாளை மறுதினம் சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடி, செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா மற்றும் அண்ணா பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாக்களில் கலந்துகொள்கிறார். இதையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகளை பிரதமரின் சிறப்புப் பாதுகாப்புப் படை குழுவினர் ஆய்வுசெய்தனர்.

    சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை மறுதினம் தொடங்கி, அடுத்த மாதம் 10-ம் தேதிவரை நடைபெறுகிறது. இதனையொட்டி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு நாள் பயணமாக சென்னை வருகிறார்.

    அகமதாபாத்திலிருந்து தனி விமானம் மூலம், நாளை மறுதினம் மாலை 4.45 மணிக்கு சென்னையை வந்தடைகிறார்.அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம், ஐஎன்எஸ் அடையார் விமான தளத்துக்கு செல்கிறார். பின்னர் கார் மூலம், நேரு உள் விளையாட்டு அரங்கிற்கு செல்கிறார்.

    Also Read : சதுரங்க வல்லபநாதர்... திருவாரூரில் செஸ் விளையாட்டிற்கு தொடர்புடைய ஒரு கோவில் !

    செஸ் போட்டி தொடக்க விழாவில் பங்கேற்றுவிட்டு, கார் மூலம் ஆளுநர் மாளிகைக்கு செல்கிறார்.ஆளுநர் மாளிகையில் இரவில் தங்கும் பிரதமர், 29-ம் தேதி காலை 10 மணிக்கு புறப்பட்டு, அண்ணா பல்கலைக் கழகம் சென்று அங்கு நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    பட்டமளிப்பு விழா முடிவடைந்தபிறகு, சென்னை விமான நிலையம் செல்லும் பிரதமர், அங்கிருந்து மீண்டும் அகமதாபாத் செல்ல திட்டமிட்டுள்ளார்.இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வுசெய்வதற்காக பிரதமரின் சிறப்பு பாதுகாப்புப் படையான எஸ்பிஜி குழுவைச்சேர்ந்த 60 பேர் சென்னை வந்துள்ளனர்.பல்வேறு குழுக்களாக பிரிந்து விமான நிலையம், நேரு உள்விளையாட்டு அரங்கம், அண்ணா பல்கலைக் கழகம், பிரதமரின் ஹெலிகாப்டர் தரையிறங்கும் ஐஎன்எஸ் அடையாறு ஆகிய இடங்களில் ஆய்வுசெய்தனர்.

    Also Read: பிரதமர் மோடி சொன்ன அட்வைஸ்.. தீவிர வொர்க் அவுட்டில் களம் இறங்கிய பீகார் எதிர்க்கட்சி தலைவர்..

    மேலும், சென்னை விமான நிலையம் முழுவதும் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மீனம்பாக்கம் பழைய விமான நிலையம் முழுவதும் சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. விமான நிலையத்திற்கு அனுமதி இன்றி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் 29-ம் தேதி மாலை வரை அமலில் இருக்கும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Chennai, Chess, Chess Olympiad 2022, Modi

    அடுத்த செய்தி