2 நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி, செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைப்பதோடு, அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிலும் பங்கேற்கிறார்.
இந்தியாவில் முதல் முறையாக நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். போட்டியில் பங்கேற்கும் ஏராளமான வெளிநாட்டு வீரர்கள் சென்னை வந்து சேர்ந்துள்ளனர்.
அவர்களுக்கு விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டு ஹோட்டலில் தங்க வைக்கப் பட்டுள்ளனர்.
இந்தியாவில் ஓபன் பிரிவில் 3 அணிகளும் பெண்கள் பிரிவில் 3 அணிகளும் களம் இறங்க உள்ளனர். பிரக்ஞானந்தா , கோனேரு ஹம்பி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர். சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நாளை மாலை நடைபெறும் செஸ் விளையாட்டு போட்டியின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு தொடங்கி வைக்கின்றார். தமிழக முதல்வர் , மத்திய அமைச்சர்கள் என பல்வேறு பிரபலங்கள் இதில் கலந்து கொள்கின்றனர். பிரதமரின் வருகையை ஒட்டி சென்னை காவல் ஆணையர் தலைமையில் 22,000 காவல் அதிகாரிகளுடன் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 2 நாட்கள் ட்ரோன்கள் , ஆளில்லா விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி தமிழக பயண விபரம் குறித்த விவரங்களை இதில் காணலாம்.
28/07/2022 ம் தேதி பிரதமர் மோடி தமிழக பயண விபரம் :
மதியம் 2.20 மணி அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து சென்னை வருகை
மாலை 5.25 மணி சென்னை விமான நிலையத்தில் இருந்து அடையார் IN3 கடற்கரை தளம் வருகை
மாலை 5.50 மணி அடையார் InCS கடற்படை தளத்தில் இருந்து நேரு உள் விளையாட்டு அரங்கம் புறப்படுதல்.
மாலை 6.00 மணி 7.30 மணி 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான துவக்க விழாவில் கலந்து கொள்கிறார்.
மாலை 7.50 மணி ஆளுநர் மாளிகையில் இரவு ஓய்வு
29/07/2022ம் தேதி பிரதமர் மோடி தமிழக பயண விபரம் :
காலை 9.55 மணி ஆளுநர் மாளிகையில் இருந்து அண்ணா பல்கலைக்கழகம் வருகை
காலை 10.00 மணி -11.30 மணி' அண்ணா பல்கலைக்கழகத்தின் 42 வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.
காலை 11.35 மணி அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து சென்னை விமான நிலையம் புறப்படுகிறார்.
காலை 11:55 மணி சென்னையில் இருந்து விமானத்தில் புறப்படுகிறார்.
Published by:Sankaravadivoo G
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.