ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான இலச்சினையை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்!

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான இலச்சினையை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்!

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான இலச்சினையை வெளியிட்ட முதல்வர்!

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான இலச்சினையை வெளியிட்ட முதல்வர்!

44th chess olympiad | தொடர்ந்து 50 நாட்கள் கவுண்டவுன் மற்றும் திட்ட வரைப்பட காட்சியையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான இலச்சினையை  முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். மேலும், செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான 50 நாள் கவுண்ட்டவுனையும் தொடங்கி வைத்தார்.

சென்னை மாமல்லபுரத்தில் 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெறவுள்ளது. இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 186 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் அதிகமான சர்வதேச செஸ் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனர்.

இந்நிலையில், ரிப்பன் மாளிகை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான இலச்சினையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அகில இந்தியா சதுரங்க கூட்டமைப்பின் தலைவர் சஞ்சய் கபூர் உள்ளிட்டோர் இன்று வெளியிட்டனர்.

அதனை தொடர்ந்து செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான சின்னத்தை (mascot) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். தொடர்ந்து 50 நாட்கள் கவுண்டவுன் மற்றும் திட்ட வரைப்பட காட்சியையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பு தலைவர் சஞ்சய் கபூர், செயலாளர் பரத் சிங், அமைச்சர்கள், சென்னை மாநகராட்சி மேயர், துணை மேயர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

First published:

Tags: Chess, CM MK Stalin