Home /News /tamil-nadu /

அதிமுகவில் இருந்து மேலும் 44 பேர் நீக்கம்.. ஓபிஎஸ் வெளியிட்ட 2வது லிஸ்ட்..!! - நீக்கப்பட்டவர்கள் விவரம்...

அதிமுகவில் இருந்து மேலும் 44 பேர் நீக்கம்.. ஓபிஎஸ் வெளியிட்ட 2வது லிஸ்ட்..!! - நீக்கப்பட்டவர்கள் விவரம்...

ஓபிஎஸ்

ஓபிஎஸ்

எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 22 பேரை கட்சியில் இருந்து நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக நேற்றைய தினம் அறிவித்திருந்தார்.

    அதிமுகவில் இருந்து மேலும் 44 பேர் நீக்கம் செய்வதாக ஓ.பன்னீர்செல்வம் 2வதாக ஒரு பட்டியலை இன்று வெளியிட்டுள்ளார்.

    முன்னதாக, கட்சியின் கொள்கை - குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதலாலும், கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்திற்காக அதிமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், ஜெயபிரதீப் உட்பட ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் 18 பேர் அதிமுகவில் இருந்து கூண்டோடு நீக்கப்படுவதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

    இந்நிலையில், இந்த அறிவிப்புக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 22 பேரை கட்சியில் இருந்து நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக நேற்றைய தினம் அறிவித்தார். அதன்படி, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார், செல்லூர்ராஜூ, ஆர்.பி.உதயகுமார், செங்கோட்டையன், சி.வி.சண்முகம், ஓ.எஸ்.மணியன், கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், வளர்மதி, கோகுல இந்திரா, தி.நகர் சத்யா, ஆதி ராஜாராம், எம்.கே. அசோக், விருகை வி.என்.ரவி, கே.பி.கந்தன், சி.வி.சண்முகம், ஆர். இளங்கோவன், வி.வி.ராஜன் செல்லப்பா, எஸ்.டி.கே.ஜக்கையன் ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள் என்று அறிவித்திருந்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அதன் தொடர்ச்சியாக இன்றும் மேலும் 44 பேரை அதிமுகவில் இருந்து நீக்கம் செய்து ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

    அதிமுக கொள்கை-குறிக்கோள்களுக்கும்‌, கோட்பாடுகளுக்கும்‌ முரணான வகையில்‌ செயல்பட்டதாலும்‌, கழகத்தின்‌ கண்ணியத்திற்கு மாசு ஏற்படும்‌ வகையில்‌ நடந்து கொண்டதாலும்‌, கழகக்‌ கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும்‌, அவப்பெயரும்‌ உண்டாகும்‌ விதத்தில்‌ செயல்பட்ட காரணத்தினாலும்‌

    1. பொள்ளாச்சி ஜெயராமன்‌ (திருப்பூர்‌ மாநகர்‌ மாவட்டக்‌ கழகச்‌ செயலாளர்‌)

    2. விஜயபாஸ்கர் (புதுக்கோட்டை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர்)

    3. கீர்த்திகா முனியசாமி (மகளிர் அணி இணைச் செயலார்)

    4. ராஜேஷ் (வட சென்னை வடக்கு(கிழக்கு) மாவட்டக் கழகச் செயலாளர்)

    5. வெங்கடேஷ் பாபு (வடசென்னை வடக்கு (மேற்கு) மாவட்டக் கழகச் செயலாளர்)

    6. பாலங்கா (தென் சென்னை தெற்கு (மேற்கு) மாவட்டக் கழகச் செயலாளர்)

    7. சோமசுந்தரம்‌ (காஞ்சிபுரம்‌ மாவட்டக்‌ கழகச்‌ செயலாளர்‌, முன்னாள்‌ அமைச்சர்‌)

    8. திருக்கழுகுன்றம்‌ எஸ்‌.ஆறுமுகம் (செங்கல்பட்டு கிழக்கு மாவட்டக்‌ கழகச்‌ செயலாளர்‌)

    9. சிட்லபாக்கம்‌ ச.ராசேந்திரன்‌, (செங்கல்பட்டு மேற்கு மாவட்டக்‌ கழகச்‌ செயலாளர்‌)

    10. பென்ஜமின்‌ (திருவள்ளூர் மத்திய மாவட்டக் கழகச் செயலாளர்)

    11. அலெக்சாண்டர்‌, (திருவள்ளூர்‌ தெற்கு மாவட்டக்‌ கழகச்‌ செயலாளர்‌)

    12. மாதவரம் (திருவள்ளூர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர்)

    13. ரமணா (திருவள்ளூர்‌ மேற்கு மாவட்டக்‌ கழகச்‌ செயலாளர்‌,
    முன்னாள்‌ அமைச்சர்)

    14. அப்பு (வேலூர்‌ மாநகர்‌ மாவட்டக்‌ கழகச்‌ செயலாளர்‌‌)

    15. வேலழகன் (வேலூர்‌ புறநகர்‌ மாவட்டக்‌ கழகச்‌ செயலாளர்‌)

    16. வீரமணி (திருப்பத்தூர்‌ மாவட்டக்‌ கழகச்‌ செயலாளர்‌)

    17. ரவி (ராணிப்பேட்டை மாவட்டக் கழகச் செயலாளர்)

    18. தூசிமோகன் (திருவண்ணாமலை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர்)

    19. அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி (திருவண்ணாமலை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர்)

    20. பாண்டியன் (கடலூர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர்)

    21. அருண்மொழிதேவன் (கடலூர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர்)

    22. குமரகுரு (கள்ளக்குறிச்சி மாவட்டக் கழகச் செயலாளர்)

    23. அசோக்குமார் (கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர்)

    24. கே.பி.அன்பழகன் (தருமபுரி மாவட்டக் கழகச் செயலாளர்)

    25. வெங்கடாஜலம்‌ (சேலம்‌ மாநகர்‌ மாவட்டக்‌ கழகச்‌ செயலாளர்‌)

    26. இராமலிங்கம்‌ (ஈரோடு மாநகர்‌ மாவட்டக்‌ கழகச்‌ செயலாளர்‌)

    27. கருப்பணன்‌ (ஈரோடு புறநகர்‌ மாவட்டக்‌ கழகச்‌ செயலாளர்‌)

    28. மகேந்திரன்‌ (திருப்பூர்‌ புறநகர்‌ கிழக்கு மாவட்டக்‌ கழகச்‌ செயலாளர்‌)

    29. அம்மன்‌ அர்ச்சுணன்‌ (கோவை மாநகர்‌ மாவட்டக்‌ கழகச்‌ செயலாளர்‌)

    30. அருண்குமார்‌ (கோவை புறநகர்‌ வடக்கு மாவட்டக்‌ கழகச்‌ செயலாளர்‌)

    31. கப்பச்சி வினோத்‌ (நீலகிரி மாவட்டக்‌ கழகச்‌ செயலாளர்‌)

    32. பரஞ்ஜோதி (திருச்சி புறநகர்‌ வடக்கு மாவட்டக்‌ கழகச்‌ செயலாளர்‌)

    33. ப.குமார்‌ (திருச்சி புறநகர்‌ தெற்கு மாவட்டக்‌ கழகச்‌ செயலாளர்‌)

    34. விஜயபாஸ்கர்‌ (கரூர்‌ மாவட்டக்‌ கழகச்‌ செயலாளர்‌)

    35. பவுன்ராஜ்‌ (மயிலாடுதுறை மாட்டக்‌ கழகச்‌ செயலாளர்‌)

    36. காமராஜ்‌ (திருவாரூர்‌ மாவட்டக்‌ கழகச்‌ செயலாளர்‌)

    37. வைரமுத்து (புதுக்கோட்டை தெற்கு மாவட்டக்‌ கழகச்‌ செயலாளர்‌)

    38. செந்தில்நாதன் (சிவகங்கை மாவட்டக்‌ கழகச்‌ செயலாளர்‌)

    39. முனியசாமி (ராமநாதபுரம்‌ மாவட்டக்‌ கழகச்‌ செயலாளர்‌)

    40. கணேசராஜா (திருநெல்வேலி மாவட்டக்‌ கழகச்‌ செயலாளர்‌)

    41. செல்வமோகன்தாஸ்‌ பாண்டியன்‌, (தென்காசி தெற்கு மாவட்டக்‌ கழகச்‌ செயலாளர்‌)

    42. சண்முகநாதன்‌ (தூத்துக்குடி தெற்கு மாவட்டக்‌ கழகச்‌ செயலாளர்‌)

    43. ஜான்தங்கம் (கன்னியாகுமரி மேற்கு மாவட்டக்‌ கழகச்‌ செயலாளர்‌)

    44. அன்பழகன் (புதுச்சேரி மாநில (கிழக்கு) கழகச்‌ செயலாளர்‌)

    ஆகியோர்‌ இன்று முதல்‌ கழகத்தின்‌ அடிப்படை உறுப்பினர்‌ பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும்‌ நீக்கி வைக்கப்படுகிறார்கள்‌.

    கழக உடன்பிறப்புகள்‌ யாரும்‌ இவர்களுடன்‌ எவ்விதத்‌ தொடர்பும்‌ வைத்துக்‌ கொள்ளக்கூடாது எனக்‌ கேட்டுக்‌ கொள்கிறேன்‌. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: OPS, OPS - EPS

    அடுத்த செய்தி